ETV Bharat / city

கடலோர மீனவர்களின் படகுகள் தெருவில் நிறுத்தி வைப்பு! - Government Korada Anandaraman

புதுச்சேரி : நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமப்புற கடலோர மீனவர்கள் தங்கள் படகுகளை டிராக்டரைக் கொண்டு அகற்றி தெருவில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Coastal fishermen's boats parked on the street  fishermen's boats  Coastal fishermen's  கடலோர மீனவர்கள் படகுகள் தெருவில் நிறுத்தி வைப்பு  கடலோர மீனவர்கள்  படகுகள்  அரசு கொறடா அனந்தராமன்செய்தியாளர் சந்திப்பு  அரசு கொறடா அனந்தராமன்  Government Korada Anandaraman  Government Korada Anandaraman Press Meet in Puducherry
Coastal fishermen's boats parked on the street
author img

By

Published : Nov 24, 2020, 9:50 PM IST

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் வலுப்பெற்று நாளை (நவ.25) மாமல்லபுரம்-புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் பெரிய படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். சிறிய படகுகளை அங்கு நிறுத்த இடப்பற்றாக்குறை நிலவும் நிலையில், புதுச்சேரி, நல்லவாடு மீனவ கிராமப்புற மக்கள், தங்கள் பைபர், கட்டுமரப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த கடற்கரைப் பகுதியிலிருந்து அவற்றை அகற்றி தங்கள் வீட்டு தெருவோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

அவர்களுக்கு மனவெளித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அரசு கொறடாவுமான அனந்தராமன் டிராக்டர் மூலம் படகுகளை கடற்கரைப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த உதவினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனந்தராமன், ”புயல்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்தாயிரம் பேருக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

இதையும் படிங்க:சென்னையில் கடும் கடல் சீற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.