ETV Bharat / city

பொதுப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் மீதமுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு! - குடும்ப அட்டைதாரர்கள்

பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியது போக, மீதமுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பொதுப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
author img

By

Published : Feb 9, 2022, 11:20 AM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கடந்த மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்பானது நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பொதுப் பயன்பாட்டிற்கு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, மீதமுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்களின் தரத்தினை உறுதிசெய்த பின்னர், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், துணை ஆணையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு கீழ்காணுமாறு தீர்வு செய்துகொள்ளலாம் என ஆணையில் கூறப்பட்டுள்ளது.

1. மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆணையாளர் ஆகியோரது விருப்பத்தின்பேரில், பொதுநல அரசு சார், அரசு சாரா அமைப்புகளில் தங்கிப் பயன் பெற்றுவரும் பொருளாதாரத்தில் நலிவுற்றப் பயனாளிகளுக்கு வழங்கலாம்.

2. தொழுநோயாளிகளுக்கான காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு வழங்கலாம்.

3. அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள், ஊரக குடிசைப் பகுதிகளில் உள்ள நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வழங்கலாம்.

4. கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள, குணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கலாம்.

5. அம்மா உணவகம் / சமுதாய சமையற்கூடங்கள், இன்னும் பிற பொதுப் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: சின்னங்கள் வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுதலுக்கு அனுமதி இல்லை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.