ETV Bharat / city

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100% அரசுப் பணி - அரசாணை வெளியீடு - அரசுப் பணி வழங்குவது குறித்து அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100 விழுக்காடு அரசுப் பணி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகம்
சென்னை தலைமைச் செயலகம்
author img

By

Published : Dec 4, 2021, 10:18 AM IST

சென்னை: தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 100 விழுக்காடு அரசுப் பணி வழங்குவதற்கு ஏற்ப, டிஎன்பிஎஸ்சி (TNPSC), டி.ஆர்.பி. (TRB), எம்.ஆர்.பி. (MRB), சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் என அனைத்து முகமைகளின் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம், வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட ஆணையில், “தேர்வுகள் அனைத்திலும், நியமன அலுவலர்களால் தேவைப்படும் நேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாளினைத் தகுதித் தேர்வாகக் கட்டாயமாக்க அரசு முடிவு மேற்கொண்டு, அவ்வாறே ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினைப் பொறுத்தவரையில், கட்டாயத் தமிழ் மொழித்தேர்வு அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் பின்வரும் வழிவகைகளில் நடத்தப்படும். தமிழ் மொழித் தகுதித்தாள் (Qualifying Paper), தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் / தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination), முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination) என இரண்டு நிலைகளைக் (Two stages of Examination) கொண்டதாக உள்ள தொகுதி 1, II, IIA ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது, முதன்மைத் தேர்வுடன் (Main Written Examination) விரிந்துரைக்கும் வகையிலான (Descriptive Type) தேர்வாக அமைக்கப்படும்.

முதன்மை எழுத்துத் தேர்வானது மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது), கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும்.

இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இத்தகுதித் தாளில் (Qualifying Paper) குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying marks) பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வின் (Main Written Examination) இதர போட்டித் தேர்வுத்தாள் / தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

ஒரே நிலைகொண்ட (Single stage Examination) தேர்வுகளின் (தொகுதி III மற்றும் IV) நடைமுறைகள் விவரம்:

தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் உள்ள நேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொதுத் தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும். அதாவது, தொகுதி III, IV போன்ற ஒரே நிலைகொண்ட (Single stage Examination) தேர்வுகளுக்கு, தமிழ்மொழித் தாளானது தகுதி, மதிப்பீட்டுத் தேர்வாக (Tamil Eligibility Cum Scoring Test) நடத்தப்படும்.

இத்தமிழ் மொழித் தகுதி, மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி-அ எனக் கொள்குறி வகையில் (Objective Type) அமைக்கப்படும். பொது அறிவுத் திறனறிவு (Aptitude) மனக்கணக்கு நுண்ணறிவு (Mental Ability) ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு பகுதி-ஆ எனக் கொள்குறி வகையில் (Objective Type) நடத்தப்படும். (4) பகுதி - அ - வில் குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qunlifying Marks) பெற்றால் மட்டுமே பகுதி ஆ - வில் எழுதிய தேர்வுத்தாளும், இதர தாள்களும் மதிப்பீடு செய்யப்படும்.

இவ்விரண்டு பகுதிகளின் (பகுதி அ மற்றும் ஆ) அனைத்துத் தாள்களின் மொத்த மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஒரே நிலைகொண்ட (Single stage Examination) இதர போட்டித் தேர்வுகளின் நடைமுறைகள் விவரம். தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் உள்ள நேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.

மேற்படி தமிழ்மொழி தேர்வானது பகுதி - அ எனக் கொள்குறி வகையில் (Objective Type) 150 மதிப்பெண்களுக்குத் தகுதித் தேர்வாக மட்டுமே நடத்தப்படும். தரவரிசைக்கு இம்மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படாது. இத்தேர்வில் குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) பெற்றால் மட்டுமே. பகுதி ஆ மற்றும் இதரப் போட்டித் தேர்வுத்தாள் / தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் மேற்படி தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு வனத் துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள இதரத் தெரிவு முகமைகளைப் பொறுத்தவரையில், கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.