சென்னை: தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து எழுதியுள்ள கடிதத்தில், ’தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா- தமிழ்நாடு எல்லைப் பகுதியான சித்தூர் மாவட்டத்தின் வழியாக ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது. அதேபோல், வாணியம்பாடி, தும்பேரி, பேர்ணாம்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.
ரேஷன் அரிசி கடத்தலுக்கு இரு சக்கர வாகனங்கள் முதல் லாரிகள் வரைப் பயன்படுத்தப்படுகின்றன. எனது குப்பம் தொகுதிக்கு வரும் ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர். இதனால் எனது குப்பம் தொகுதியில் மட்டும் 16 மாதங்களில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து ரூபாய் 40-க்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் விற்பனை செய்கின்றனர். எனவே, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநில எல்லைகளில் அதிகளவில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் அரிசிக் கடத்தப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும். ரேஷன் அரிசி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது, இதையெல்லாம் மறைத்து விட்டு இந்திய நாட்டின் முன்னோடி முதலமைச்சர் என தன்னை தானே பிரகடனப்படுத்தி கொள்வது
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
வெட்கக் கேடானது. pic.twitter.com/m3ztxzS7zh
">தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது, இதையெல்லாம் மறைத்து விட்டு இந்திய நாட்டின் முன்னோடி முதலமைச்சர் என தன்னை தானே பிரகடனப்படுத்தி கொள்வது
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 24, 2022
வெட்கக் கேடானது. pic.twitter.com/m3ztxzS7zhதமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது, இதையெல்லாம் மறைத்து விட்டு இந்திய நாட்டின் முன்னோடி முதலமைச்சர் என தன்னை தானே பிரகடனப்படுத்தி கொள்வது
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 24, 2022
வெட்கக் கேடானது. pic.twitter.com/m3ztxzS7zh
இதுகுறித்து தனது எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது, இந்த விடியா அரசின் நிர்வாக சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இதையெல்லாம் மறைத்து விட்டு இந்திய நாட்டின் முன்னோடி முதலமைச்சர் என தன்னை தானே பிரகடனப்படுத்தி கொள்வது வெட்கக் கேடானது’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மண்வெட்டியால் வெட்ட பாய்ந்த திமுக வழக்கறிஞர்; வைரலாகும் வீடியோ