ETV Bharat / city

'15 நாள்களில் ஸ்மார்ட் கார்டு' - ஆளுநர் அறிவிப்பு - Governor's Speech

குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாள்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 21, 2021, 1:00 PM IST

சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர், கரோனா பரவல் காரணமாக, ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நீட், வேளாண் சட்டங்களை ரத்துசெய்தல், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, நிதித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு எனப் பல்வேறு முக்கிய அம்சங்களை அறிவித்தார்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்காக
வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக

தொடர்ந்து பேசிய அவர், "குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாள்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஆவின் விலை தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டதை அடுத்து, தற்போது ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விற்பனை ஏறத்தாழ 1.5 லட்சம் லிட்டர் அளவு உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், "வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். மின் ஆளுகையை ஊக்குவித்து இணையவழி மூலம் அரசு சேவைகளைப் பெறுவதற்கு எங்கும் எப்போதும் பொதுமக்கள் உடனுக்குடன் இணையவழி வாயிலாகப் பெற வழிவகைச் செய்யப்படும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக மொத்தம் 10 ஆயிரத்து 68 கோடி ரூபாய் இந்த அரசு பதவி ஏற்றது முதல் வழங்கியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு புதிய தடுப்பூசி கிடைக்க உறுதிசெய்யுமாறு ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'நீட், வேளாண் சட்டம் ரத்து, தமிழுக்கு முன்னுரிமை, நிதித் துறை குழு' - ஆளுநர் உரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.