சென்னை: பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானத்தை, பயணிகள் இறங்கிச் சென்ற பின் சுங்கத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது விமானக் கழிவறையில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பார்சல் இருந்தது. அவற்றைப் பிரித்துப் பார்த்த போது நான்கு தங்கக் கட்டிகள் இருந்தது. தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ. 20 லட்சம் எனத் தெரியவந்துள்ளது. 447 கிராம் எடை கொண்ட அந்தத் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பன்னாட்டு முனையத்திற்கு வந்த விமானம், சென்னை உள்நாட்டு முனையத்திலிருந்து உள்நாட்டு விமானமாகச் செல்ல இருந்தது.
இதனால் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை, அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதால் கழிவறையில் வைத்து உள்நாட்டு விமானமாகச் செல்ல இருந்த போது அவற்றை எடுக்க கடத்தல்காரர்கள் திட்டமிட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: deep sea trainer makes awareness: கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் ஆழ்கடலில் கரோனா விழிப்புணர்வு!