சென்னை: சார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்தின் பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றாா்.
சந்தேகமடைந்த அலுவலர்கள் அவரை அழைத்து வந்த சோதனையிட்டனர். அப்போது, அவருடைய சூட்கேசில் மறைத்து வைத்திருந்த, 300 கிராம் எடை கொண்ட தங்கக்கட்டி மற்றும் ரூ.26 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கடத்தலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்தனர்.
இதேபோல், துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்தபோது, அவர் உள்ளாடையில் 2 பார்சல்களில் தங்க பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்த அலுவலர்கள், அவரிடமிருந்து ரூ.74 லட்சம் மதிப்புள்ள தங்கப்பசையை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில், ஒரே நேரத்தில் ரூ.1.15 கோடி மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் மின்னணு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சமூக நீதியை ஒன்றிய அரசு பின்பற்றவேண்டும் - கனிமொழி