ETV Bharat / city

காவிரி நீரை தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் - ஜி.கே.மணி கோரிக்கை

ஒகேனக்கல் வழியாக காவிரியில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் நீரை நீரேற்றம் முறையில் தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் ஜி.கே.மணி எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.

ஜி.கே.மணி எம்எல்ஏ
ஜி.கே.மணி எம்எல்ஏ
author img

By

Published : May 7, 2022, 6:50 AM IST

சென்னை: சட்டப்பேரவையின் நேற்று (மே 06) நேரமில்லா நேரத்தில் பேசிய ஜி.கே.மணி எம்எல்ஏ பேசுகையில், "தருமபுரி மாவட்டம் விவசாயத்தை நம்பியுள்ள வறட்சியான மாவட்டம். தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 987 மி.மீ ஆக இருந்தாலும் தருமபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 853 மி.மீ ஆகும்.

மழையளவு குறைந்த மாவட்டம், பெரிய பாசன திட்டம் இல்லாத மாவட்டம் தருமபுரி மாவட்டம். இவ்வாறு பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும் 555 ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகளை உள்ளடக்கிய மாவட்டமாகும். மழை பெய்யாத காலங்களில் நிரம்பாத நீர் நிலைகள் அதிகமுள்ள மாவட்டம். பாசன திட்டங்கள் ஏதுமில்லாத காரணத்தினால் கம்பு, சோளம், சாமை, உளுந்து போன்ற பயிர்களை நம்பியுள்ள விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 2,10,300 விவசாய குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். ஆனால் நீர்ப்பாசன திட்டங்கள் இல்லாததால் 1,90,000 குடும்பங்கள் கர்நாடகா, ஓசூர் போன்ற வெளி மாவட்டங்களுக்கு கல்லுடைக்க சென்றும், பெண்கள் ஈரோடு, திருச்சி போன்ற வெளி மாவட்டங்களுக்கு நெல் அறுவடை வேலைக்கு செல்லும் அவல சூழ்நிலையே நிலவுகிறது.

கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும், குடும்ப வளர்ச்சிக்காகவும் மகளிர் சுய உதவி குழுக்களை 1981 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இப்படிப்பட்ட பின்தங்கிய மாவட்டத்திற்கு தேவை பாசன திட்டம் மட்டுமே. ஒகேனக்கல் வழியாக காவிரியில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் நீரை நீரேற்றம் முறையில் தர்மபுரி மாவட்டத்திற்கு கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று பாமக உறுப்பினர் ஜிகே மணி கூறுகிறார். நீர் ஏற்றம் முறைக்கு, தஞ்சை மாவட்ட டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகைகளில் போராடி வருகின்றனர். முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அதற்குரிய பணிகள் செய்து தரப்படும்” என பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஊடங்கு ரத்து; ஒகேனக்கல் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.