ETV Bharat / city

'என் காதலனுடன் பேசக்கூடாது' - சாலையில் சண்டை போட்ட கல்லூரி மாணவிகள்

author img

By

Published : Apr 6, 2022, 7:44 AM IST

காதல் விவகாரத்தில் சாலையில் கல்லூரி மாணவிகள் முடியை பிடித்து தாக்கி கொள்ளும் காணொலி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மாணவிகள் முடியை பிடித்து இழுத்து சண்டை
மாணவிகள் முடியை பிடித்து இழுத்து சண்டை

சென்னை: அண்ணாநகர் ரவுண்டானா பேருந்து நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 5) மதியம் பேருந்து ஏறுவதற்காக கல்லூரி மாணவ, மாணவிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் இயங்கி வரக்கூடிய பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தகராறு கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் முடியை பிடித்துக்கொண்டு சாலையில் தாக்கி கொண்டனர். குறிப்பாக தனது காதலனுடன் ஏன் பேசுகிறாய் எனக்கேட்டு இரு மாணவிகளும் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் அடித்து கொள்வதை அருகிலிருந்த மாணவர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பரப்பி உள்ளனர்.

மாணவிகள் முடியை பிடித்து இழுத்து சண்டை

இந்த வீடியோ வைரலானதால் சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து காவல் நிலையத்திற்கு புகார் வரவில்லை. இதேபோல கடந்த டிசம்பர் மாதம் பள்ளி மாணவிகள் ஆவடி பேருந்து நிலையத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Video:கோயிலில் திருடி தப்பிக்க முயலும்போது கோயில் சுவர் துவாரத்தில் சிக்கிய திருடன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.