பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் செய்தி தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவரது மகன் எஸ்.பி.பி. சரண் காணொலி ஒன்றை நேற்று(ஆகஸ்ட் 16) வெளியிட்டார். எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் வேண்டி வருகின்றனர்.
இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில், " 50ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலுள்ள பல மொழிகளில் தனது இனிமையான குரலில் பாடல்களை பாடி, கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த மதிப்பிற்குரிய எஸ்.பி.பி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
-
Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS
— Rajinikanth (@rajinikanth) August 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS
— Rajinikanth (@rajinikanth) August 17, 2020Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS
— Rajinikanth (@rajinikanth) August 17, 2020
அவர் தற்போது அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார். அத்துடன் "Get well soon dear Balu sir" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இந்த காணொலி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: பாலு சீக்கிரமா எழுந்து வா... உனக்காக காத்திருக்கிறேன் - இளையராஜா உருக்கம்!