ETV Bharat / city

பேராசிரியரின் உடல் தகனம் செய்யப்பட்டது! - அன்பழகன் மறைவு

Anbazhagan
Anbazhagan
author img

By

Published : Mar 7, 2020, 9:38 AM IST

Updated : Mar 7, 2020, 7:56 PM IST

17:51 March 07

பேராசிரியரின் உடல் தகனம் செய்யப்பட்டது!

திமுகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இறுதி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்டாலின், துரைமுருகன் இருவரும் கண்ணீருடன் வெளியில் வந்தனர்.

17:43 March 07

பேராசிரியரின் முகத்தைப் பார்த்து கண்கலங்கிய ஸ்டாலின்; கண்ணீர் வடித்த துரைமுருகன்!

பேராசிரியரின் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், திருச்சி சிவா, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். அப்போது துக்கம் தாங்க முடியாமல் ஸ்டாலினும் துரைமுருகனும் கண் கலங்கினர். 

17:37 March 07

பேராசிரியருக்கு இறுதி மரியாதை செலுத்திய ஆசிரியர்!

வேலங்காடு மின் மயானத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வந்தடைந்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரின் கையைப் பிடித்து அழைத்துவந்தார். பின்னர், பேராசிரியரின் உடலுக்கு வீரமணி இறுதி மரியாதை செலுத்தினார். அவருடன் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

17:13 March 07

மயானத்தை அடைந்த பேராசிரியரின் உடல்!

சென்னை கீழ்ப்பாக்கத்திலிருந்து திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனின் உடல் வேலங்காடு மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது ஊர்வலம் மயானத்தை நெருங்கியது. இன்னும் சற்று நேரத்தில் பேராசிரியரின் உடல் தகனம் செய்யப்படும்.

16:42 March 07

'மறைந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன்' - கமல்ஹாசன்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ”திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

16:26 March 07

வேலங்காடு மயானத்தில் உடல் தகனம்!

கீழ்ப்பாக்கத்திலிருந்து பேராசிரியரின் உடல்  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வேலங்காடு மயனத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

16:22 March 07

தொடங்கியது பேராசிரியரின் இறுதி ஊர்வலம்!

பேராசிரியர் க. அன்பழகன்
பேராசிரியர் க. அன்பழகன்

பேராசிரியரின் இறுதி ஊர்வலம் தொடங்கி்யது. இதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  திரளான திமுக தொண்டர்கள் மத்தியில் க. அன்பழகனின் உடல் ஊர்ந்து செல்கிறது. 

16:21 March 07

ஸ்டாலினுக்கு அன்புமணி ஆறுதல்!

ஆறுதல் கூறும் அன்புமணி ராமதாஸ்
ஆறுதல் கூறும் அன்புமணி ராமதாஸ்

மறைந்த பேராசிரியரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார்.

15:54 March 07

’கருணாநிதிக்கு தனிமையை உணரவிடாமல் தனிப்பெரும் ஆலமரமாக இருந்தவர் பேராசிரியர்’

லியோனி பேட்டி

திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி, பேராசிரியர் க. அன்பழகனின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திராவிடச் சிந்தனையின் பெரிய தூண் சரிந்ததால், இயக்கத் தோழர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். கருணாநிதியை விட்டு பல தலைவர்கள் பிரிந்து, அவரை நிற்கதியாய் விட்டபோதிலும், அவருக்குத் தனிமையை உணரவிடாமல் துணையாக தனிப்பெரும் ஆலமரமாக இருந்தவர் பேராசிரியர்” என்றார்.

15:24 March 07

‘பேராசிரியர் சம்பாதித்தது இரண்டே இரண்டு விஷயம் தான்’ - ரஜினி பேட்டி

15:23 March 07

துணை முதலமைச்சர் அஞ்சலி

பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

15:22 March 07

பிரசாந்த் கிஷோர் அஞ்சலி

13:53 March 07

பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு திமுக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

13:21 March 07

அஞ்சலி செலுத்திய பின்னர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

13:21 March 07

அன்பழகன் வீட்டருகே குவிந்திருக்கும் திமுக தொண்டர்கள்

13:04 March 07

ஸ்டாலினுக்கு குடியரசு துணைத் தலைவர் ஆறுதல்

குடியரசு துணைத் தலைவர் ஆறுதல்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைந்த செய்தியை அறிந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: க. அன்பழகன் மறைவு: ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெங்கையா இரங்கல்

12:48 March 07

திமுக பொதுச்செயலாளர் மறைவு: அதிமுக இரங்கல்

இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதி:

“அன்பழகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சராகவும், உறுப்பினராகவும் பணியாற்றிய ஆண்டுகளில், அவரது தமிழ்ப் புலமையையும், பெருந்தன்மையான உரைகளையும், கொள்கை மாறாத நட்புறவையும், வியப்புக்குரிய உழைப்பையும் கண்டு வியந்துள்ளோம். அவரது மறைவு தமிழ்நாடு அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்”

கூடுதல் தகவல்களுக்கு: பேராசிரியர் க.அன்பழகன் மறைவு - அதிமுக இரங்கல்!

12:44 March 07

பேராசிரியர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்

12:43 March 07

அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தக் காத்திருக்கும் தொண்டர்கள்

12:39 March 07

12:38 March 07

அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்திய காட்சி

12:01 March 07

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அஞ்சலி

12:00 March 07

‘பேராசிரியரின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு’ - முதலமைச்சர் எடப்பாடி இரங்கல்

முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையின் ஒரு பகுதி:

  • அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர் பேராசிரியர் அன்பழகன். அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களை கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர். பேராசிரியர் க. அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும்.

முழு இரங்கலையும் படிக்க: க. அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

11:59 March 07

அன்பழகன் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி

11:35 March 07

வைகோ நேரில் அஞ்சலி
வைகோ நேரில் அஞ்சலி

11:34 March 07

பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல்

பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொன்னார் வெளியிட்டுள்ள ட்வீட்:  

“திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன்  இன்று அதிகாலை ஒரு மணி அளவில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்கள், தலைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை தந்திட எல்லாம்வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்”  

கூடுதல் தகபல்களுக்கு: ‘அன்பழகனின் மறைவு வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது’ - பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்

11:10 March 07

கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு அஞ்சலி

நல்லக்கண்ணு செய்தியாளர் சந்திப்பு

11:09 March 07

அன்பழகன் உடலுக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர் அஞ்சலி

திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு

11:06 March 07

அன்பழகன் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

பேராசிரியர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனின் மறைவு என்பது தமிழ்நாடு மக்களுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். பேராசிரியர் அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஸ்டாலினுக்கும் ஆழந்த இரங்கல். 60 ஆண்டுகள் அரசியல் வாழக்கையில் அவர் சம்பாதித்து மதிப்பும் மரியாதையும்தான்” என்றார்.

கூடுதல் தகவல்களுக்கு: பேராசிரியர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

10:34 March 07

'உச்சந்தலையில் விழுந்த பேரிடி' - வைகோ உருக்கம்

வைகோ

வைகோ இரங்கற்பாவின் ஒரு பகுதி:

பேரறிஞர் அண்ணா வழியில், எட்டுத்திக்கிலும் புகழ் பரப்பும் இயக்கமாய் வளர்த்த கருணாநிதிக்குத் தோன்றாத் துணையாய், திராவிட இயக்கத்தின் பாதுகாப்புக் கவசமாய் புகழ்க்கொடி உயர்த்திய, தன்மானக் காவலர், இனமானத்தின் இமயமாய் செம்மாந்து திகழ்ந்த ஏந்தல், திமுகவின் பொதுச்செயலாளர் ஆருயிர் அண்ணன் பேராசிரியர் மறைந்தார் என்ற செய்தி, உச்சந்தலையில் விழுந்த பேரிடியாய்த் தாக்கியது.

முழு இரங்கலை வாசிக்க: 'பேராசிரியரின் பேரும் புகழும் எந்நாளும் நிலைத்திருக்கும்' - வைகோ புகழாரம்

10:33 March 07

அரை கம்பத்தில் திமுக கொடி; ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரிப்பு

File Pic: கலைஞருடன் அன்பழகன்
File Pic: கலைஞருடன் அன்பழகன்

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவையடுத்து அக்கட்சியின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பழகன் மறைவெய்தியதையொட்டி, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் தள்ளிவைக்கப்படுவதாகவும், கழகக் கொடிகளை ஏழு நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: திமுக சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பு

10:19 March 07

ப.சிதம்பரம் இரங்கல்

‘திமுகவின் 47 ஆண்டு கால பொதுச்செயலாளர்’

அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

ப. சிதம்பரம் ட்வீட்:

திமு கழகத்தின் மூத்த தலைவர் மற்றும் 47 ஆண்டு கால பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் மறைவு குறித்து என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

10:08 March 07

பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி

அஞ்சலி செலுத்திய பின்னர் வைரமுத்து செய்தியாளர் சந்திப்பு

எலும்பும், நரம்பும் சதையும் கொண்ட உடல் மறைந்துவிடும், அழுகிவிடும், எரிக்கப்பட்டுவிடும் அல்லது புதைக்கப்பட்டுவிடும்.ஆனால், கொள்கை, எண்ணம், லட்சியம், வேட்கை ஆகிய தத்துவங்கள் அழிவதில்லை, பேராசிரியர் அன்பழகன் தத்துவமாக வாழ்கிறார், வாழ்ந்துகொண்டே இருப்பார்” - அஞ்சலி செலுத்திய பின் வைரமுத்து பேட்டி  

இதையும் படிங்க: க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து! 

10:06 March 07

ஸ்டாலின் கண்ணீர் கடிதம்

ஸ்டாலின் இரங்கற்பாவின் ஒரு பகுதி

  • திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது. சங்கப் பலகை சரிந்துவிட்டது!
  • இனமான இமயம் உடைந்துவிட்டது. எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்!

என்ன சொல்லித் தேற்றுவது?  

முழு கவிதையையும் வாசிக்க: ‘இனமான இமயம் உடைந்துவிட்டது!’ - பேராசிரியருக்கு ஸ்டாலின் கண்ணீர் கவிதை

10:06 March 07

திமுக நிர்வாகிகளுடன் அமர்ந்திருக்கும் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்

09:52 March 07

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்

‘பேராசிரியர் மறைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர்’ - டிடிவி தினகரன் ட்விட்டரில் இரங்கல்

கூடுதல் தகவல்களுக்கு: ‘அன்பழகன் காலமான செய்தியறிந்து வருத்தமுற்றேன்’ - டிடிவி தினகரன்

09:51 March 07

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்

‘திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர்’ - கமல்ஹாசன் ட்வீட்

கூடுதல் தகவல்களுக்கு: 'தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் இழப்பு வேதனைக்குரியது' - கமல் ட்வீட்

09:44 March 07

அன்பழகன் வீட்டின் முன் அமர்ந்திருக்கும் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள்

09:42 March 07

அன்பழகனின் உடல்
பொதுமக்களின் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அன்பழகனின் உடல்

09:09 March 07

Tribute to DMK General Seceratry Anbalagan's body

உடல்நிலை பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று (7/3/2020) அதிகாலை காலமானார். 

கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Last Updated : Mar 7, 2020, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.