கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில், தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்துவந்த எட்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிவந்த அனைவருக்கும் கரோனா கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர், ஒரு ஆய்வாளர், ஆறு உதவி ஆய்வாளர்கள், ஓட்டுநர்கள் என 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
இந்நிலையில், தற்போது மேலும் நான்கு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதனால் காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: ரூ.9 கோடியை நெருங்கும் அபராதத் தொகை