சென்னை: குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அக கணக்காளர், கணக்கு மேலாளர், காசாளர் மூவரும் சேர்ந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவன நிர்வாக அலுவலர் விஜயகுமார் என்பவர் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்திய காவலர்கள் ரூ.2.25 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனிடையே அக கணக்காளர் சந்தானகுமார், கணக்கு மேலாளர் பிரவீனா தேவி, காசாளர் கார்த்திக் மூவரும் தலைமறைவாகினர். இந்த நிலையில் நேற்று(மார்ச். 2) கணக்கு மேலாளர் பிரவீனா தேவி கணவர் சேகர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிரவீனா புழல் பெண்கள் சிறையிலும், மற்ற மூவர் சைதாப்பேட்டை கிளை சிறையிலும் அடைக்கபட்டனர்.
இதையும் படிங்க: தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரம்: மேலும் மூவர் கைது