ETV Bharat / city

'தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி ' - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் வரவேற்பு

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்திர சிறப்பு உதவித் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
author img

By

Published : Mar 25, 2022, 6:25 AM IST

Updated : Mar 25, 2022, 6:59 AM IST

சென்னை: தமிழ்நாடு நிதிநிலை 2022-23 அறிக்கையில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், தமழ்நாடு பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினருமான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'ஜனநாயகம் மற்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய ரகுராம் ராஜன், இந்தியாவைப் பொறுத்தவரை ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தில் திருத்தம் தேவை என கூறினார்.

மேலும், இந்தியாவின் தாராளவாத ஜனநாயகத்தையும் நிறுவனங்களையும் வலுப்படுத்துவது நமது பொருளாதாரம். இது எதிர்காலத்திற்கு முக்கியமானது என குறிப்பிட்டார். மேலும், நமது தாராளவாத ஜனநாயகத்தை பெரும்பான்மை சர்வாதிகாரமாக சீரழிக்க நாம் அனுமதித்தால், அது நமது பொருளாதாரம் மட்டுமல்ல, ஒரு தேசமாக நமது ஆன்மாவும் பாதிக்கப்படும் என குறிப்பிட்டார்.

கல்வி ஒன்றே முக்கியம்: "இந்தியாவின் முன்னோக்கி செல்லும் பாதை, இந்தியாவின் வரலாற்று பலமான விவாதம் மற்றும் ஜனநாயகத்தின் மீது இருக்க வேண்டும். மேலும், சீனாவைப் போல நாமும் இருக்க முடியும் என்று நினைப்பதே நமது மோசமான தவறு. ஏனெனில், உற்பத்தி சக்தியை உருவாக்க சீனா தனது சர்வாதிகார அமைப்பிற்குள் பணியாற்றியது. நமது அமைப்பில், அதே பாதையில் நடக்க முயன்றால் நாம் சீனாவுக்கு நிழலாக இருப்போம்," என கூறிய பொருளாதார வல்லுநர் சேவைகள் அல்லது கல்வியில் கவனம் செலுத்தி இந்தியா தனது சொந்த பாதையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

ஜனநாயக முறையே போதும்: முடிவெடுப்பதை மையப்படுத்தக்கூடாது எனவும் , சீனாவின் மாதிரியைப் பின்பற்ற வேண்டாம் என தெரிவித்தார். கரோனா தொற்றுநோய்களின் போது கூட இந்தியா வேகமாக வளர பெரிய வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அதன் போக்கில், மக்களை முதன்மைப்படுத்தும் ஜனநாயக வலிமை வலியுறுத்தப்பட வேண்டும் என்றார்.

மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் நல்ல தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்படும். இந்த கால கட்டத்தில், இரு அரசுகளுக்கும் நல்ல உறவு இருக்கிறதா என்ற கேள்விக்கு, ரகுராம் ராஜன் பதில் கூறுகையில், "தற்போது மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் நல்ல தகவல் பரிமாற்றம் இருக்கிறது.

உதாரணமாக, சமீபத்தில் தமிழ்நாடு நிதிநிலை 2022-23 அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சில திட்டங்களுக்கு மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து நிதிகளை ஒதுக்கியது" என கூறிய அவர், இது ஒரு சிறந்த உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்கல்வி: பெண்களின் முன்னேற்றம் மற்றும் கல்வியைப் பற்றிப் பேசும்போது, தமிழ்நாடு அரசு தனது (தமிழ்நாடு பட்ஜெட் 2022-23) நிதிநிலை அறிக்கையில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு அவர்கள் மேற்படிப்பு படிக்கும்போது, சிறப்பு உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல உதாரணம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க நிதி ஒதுக்கீடு

Last Updated : Mar 25, 2022, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.