ETV Bharat / city

'விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் ஆட்சிக்கு மரண அடி கொடுக்கவே திமுகவில் இணைந்தேன்’ - திமுக

சென்னை: விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் ஆட்சிக்கு மரண அடி கொடுக்கவே திமுகவில் இணைந்துள்ளதாக முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்கண்டேயன் கூறியுள்ளார்.

mla
mla
author img

By

Published : Oct 9, 2020, 3:09 PM IST

Updated : Oct 9, 2020, 6:56 PM IST

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மார்கண்டேயன். கடந்தாண்டு இத்தொகுதி இடைத்தேர்தலின்போது, அதிமுக சார்பில் போட்டியிட இவருக்கு வாய்ப்பளிக்கப்படாததால் தனித்து நின்று தோல்வியடைந்தார்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மார்கண்டேயன் அக்கட்சியில் இணைந்தார். அப்போது, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்கண்டேயன், “ இந்தியாவிலேயே இதுவரை யாரும் செய்திராத வகையில் ஊழலின் உச்சத்தில் சென்றுகொண்டிருக்கிறது இந்த ஆட்சி. தலைமை குழப்பத்தால் அதிமுக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் முதல்வர் என்று கூறி விவசாயிகளை ஏமாற்றி வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு மரண அடி கொடுக்க தமிழக மக்கள் தயாராகியுள்ளனர்.

தமிழகத்திற்கு துரோகம் செய்கிறவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்று உணர்ந்தே, ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த திமுகவில் இணைந்துள்ளேன் “ என்று கூறினார்.

'விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் ஆட்சிக்கு மரண அடி கொடுக்கவே திமுகவில் இணைந்தேன்’

இதையும் படிங்க: எம்எல்ஏ மனைவி ஆஜர்...!

Last Updated : Oct 9, 2020, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.