ETV Bharat / city

வேலை வாய்ப்பிற்கான முறையான மற்றும் முறைசாரா திறன் மேம்பாட்டு பயிற்சி!

சென்னை: எழிலகத்தில் வேலைவாய்ப்பிற்கான முறையான மற்றும் முறைசாரா திறன் மேம்பாட்டு பயிற்சி (தொழில், தொழில் நுட்பம், கணினி டிஜிட்டல்) குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை எழிலகம்
சென்னை எழிலகம்
author img

By

Published : Aug 20, 2020, 7:54 AM IST

சென்னை எழிலகத்தில் உள்ள மனித வள மேம்பாட்டு அரங்கத்தில் காணொலி மூலமாக வேலை வாய்ப்பிற்கான முறையான மற்றும் முறைசாரா திறன் மேம்பாட்டுப் பயிற்சி (தொழில், தொழில் நுட்பம், கணினி டிஜிட்டல் ) குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் (முன்னர் மாநிலத் திட்டக்குழு என்று அழைக்கப்பட்டது) துணைத் தலைவர் சி.பொன்னையன் தலைமை தாங்கினார்.

அதில் வேலைவாய்ப்பிற்கான முறையான மற்றும் முறைசாரா திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம், வேளாண் சார்ந்த தொழில்களான ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றில் திறன் மேம்பாட்டினை அதிகரிப்பதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உயர்த்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், இந்திய உணவு பதனிடுதல் தொழில் நுட்ப நிறுவனம், தஞ்சாவூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி நிறுவனத்தினர், துறைசார்ந்த உயர் அலுவலர்கள், வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனாவால் குறைந்த வேலைவாய்ப்பு ஜூன் மாதத்தில் 35 விழுக்காடு அதிகரித்துள்ளது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.