ETV Bharat / city

எம்.ஜி.எம் குழுமம் மீது அந்நிய செலாவணி மோசடி புகார்! - அந்நிய செலாவணி மோசடி

எம்.ஜி.எம் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அக்குழுமத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

mgm
mgm
author img

By

Published : Jun 16, 2022, 10:09 PM IST

சென்னை: எம்.ஜி.எம் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் பெங்களூருவில் அக்குழுமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2ஆவது நாளாக இன்றும் (ஜூன் 16) சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல தனியார் வங்கி (ஆக்சிஸ் வங்கி) துணை தலைவர் கோபி கிருஷ்ணன், எம்.ஜி.எம் குழுமத்தின் நிறுவனங்களுள் ஒன்றான எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனம், தங்கள் வங்கியின் பெயரில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் அளித்துள்ளார்.

புகாரில், "சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் தங்கள் தனியார் வங்கி கிளையில், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் எம்.ஜி.எம் குழும நிறுவனமான எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனம், அவர்களின் சிங்கப்பூரில் உள்ள இரு கிளை நிறுவனங்கள், லண்டனில் இயங்கும் ஒரு கிளை நிறுவனம் என 3 நிறுவனங்கள் பெயரில் 3 வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, எங்கள் வங்கியின் பல்வேறு சலுகைகளை பெற்று வருகிறார்கள்.

இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் சென்னை ஆர்.கே. சாலையில் இயங்கி வரும் நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நேரடியாக அந்நிய செலாவணி முதலீட்டில் எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகள் எங்கள் வங்கியின் மூலம் நடைபெறுகிறது.

எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனம் எங்கள் வங்கியில் கணக்கு வைத்துள்ளதன் அடிப்படையில், குறிப்பிட்ட வழக்குத் தொடர்பாக அந்நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆவணங்களுடன் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை மூலம் எங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் எங்கள் வங்கி சார்பில் எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனம், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் முதலீடு செய்தது தொடர்பாகவும், பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக கணக்கு வழக்குகளையும், ஆவணங்களையும் தயார் செய்து அமலாக்கத்துறைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டோம்.

அப்போது, குறிப்பிட்ட 2 பரிவர்த்தனைகளில் எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனம் எங்கள் வங்கியிடமே உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் மறைத்து, முறைகேடாக பணப்பரிவர்த்தனை நிகழ்த்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த டிசம்பர் 2020ஆம் ஆண்டும், ஜனவரி 2021ஆம் ஆண்டும் 2 பரிவர்த்தனைகளை எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனம் எங்கள் வங்கி பெயரில் மோசடியாக நிகழ்த்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற அந்நிய செலாவணி முதலீடுகளில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பணப்பரிவர்த்தனை அந்நிய முதலீடாக இருக்கும் பட்சத்தில், உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும், அதன் மூலம் பரிவர்த்தனையை சட்டரீதியாக எடுத்துச் செல்வதற்கும் எங்கள் வங்கி வழிவகைகள் செய்துள்ளன.

இந்த வழிவகைகளை தவறாகப் பயன்படுத்தி எங்கள் வங்கிக்கே தெரியாமல் எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனம் 2 பணப் பரிவர்த்தனைகளை மோசடியாக நடத்தியுள்ளது. அதனால் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் புகாரில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.எம் குழுமம் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது தனியார் வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நெல் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் - ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.