ETV Bharat / city

பரிசோதனைக்கு உடன்படாமல் பதுங்கியிருந்த வெளிநாட்டவர் கைது.! - சென்னை: முத்தியால்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த 3 பெண்கள் உட்பட 8 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: முத்தியால்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த 3 பெண்கள் உட்பட 8 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரிசோதனைக்கு உடன்படாமல் பதுங்கியிருந்த வெளிநாட்டவர் கைது.!

author img

By

Published : Apr 13, 2020, 12:31 PM IST

சென்னை முத்தியால்பேட்டையில் அப்பு மேஸ்திரி தெருவில் உள்ள மசூதியில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த முத்தியால்பேட்டை காவல் துறையினர் அங்கு பதுங்கி இருந்த எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மத குருக்களான 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஆகியோரை கைது செய்தனர்.

காவல் துறையினர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் சட்டவிரோதமாக சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்து மத பரப்புரையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்று குறித்து அரசு எச்சரித்தும் இவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படாமல் மசூதியிலேயே பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.

இவர்களை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

வீட்டு கண்காணிப்பில் 70 வெளிநாட்டவர்கள் - ஆட்சியர் தகவல்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.