ETV Bharat / city

ஹைட்ரோ கார்பன் போராட்டதிற்கு அனுமதி மறுப்பு - சென்னை உயர் நீதிமன்றம் - அமமுக

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அமமுக போராட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

chennai HC
author img

By

Published : Jul 1, 2019, 5:30 PM IST

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பேருந்து நிலையம் அருகே வரும் ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிகோரி, அமமுக கடலூர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரை தெரிவிக்காததால் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என தமிழ்நாடு அரசு கடந்த 2015ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது வரை அரசாணை தொடர்வதால் புதிதாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. போராட்டம் செய்யும் வேலை பறிபோய்விடும் என்ற நோக்கத்தில் அரசியல் கட்சியினர் அனுமதி கேட்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.

மேலும், கடலூர் அமமுக சார்பில் தாக்கல் செய்த வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தும், இதேபோன்று விழுப்புரம் அமமுக சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Intro:Body:ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்த்து அமமுக (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) போராட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பேருந்து நிலையம் அருகே ஜூலை 7 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி அமமுக கடலூர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசு இதுவரை தெரிவிக்காததால் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என தமிழக அரசு கடந்த 2015 ம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது வரை அரசாணை தொடர்வதால் புதிதாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

போராட்டம் என்ற வேலை பறிபோய்விடும் என்ற நோக்கத்தில் அரசியல் கட்சியினர் அனுமதி கேட்க வேண்டாம் என தெரிவித்து வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

இதேபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கு திரும்ப பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.