இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் கார்சன் கடந்த 30.09.2020 அன்று இராமேஸ்வரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து விசைப்படகில் ஏழு மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்று கடலில் வலை இறக்கும் போது கடலில் தவறி விழுந்து காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடியாக மீன்வளத்துறை, இந்திய கடலோர காவல் படை மற்றும் உள்ளுர் மீனவர்களின் உதவியுடன் தேடுதல் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
04.10.2020 அன்று இலங்கை, அல்லைபட்டி என்ற கடற்கரை பகுதியில் காணாமல் போன மீனவரின் உடல் கரை ஒதுக்கியுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வழியாக தகவல் பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உடனடியாக இறந்த மீனவரின் உடலை நல்லடக்கத்திற்காக தமிழ்நாடு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
இதன் பலனாக 06.10.2020 அன்று இறந்த மீனவர் கார்சன், என்பவரின் உடல் கடல் மார்கமாக இலங்கை அரசால் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு , நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் வழங்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.