ETV Bharat / city

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ - பி.எஸ்.என்.எல் அலுவலகம்

சென்னை: பிஎஸ்என்எல் அலுவலகத்தின் நான்கு தளங்களில் ஏற்பட்ட பயங்கர தீயினை தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி அணைத்தனர்.

தீ
author img

By

Published : Aug 1, 2019, 10:47 AM IST

இன்று அதிகாலை நான்கு மணிக்கு சென்னை மண்ணடியில் உள்ள ஐந்து தளங்களைக் கொண்ட பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட புகை மண்டலத்தால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்தனர்.

இதன்பேரில், சம்பவ இடத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து மூன்று மணி நேர கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:Body:சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

சென்னை மண்ணடியில் இன்று காலை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை மண்ணடியில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் டெலிபோன் எக்சேஞ்ச் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் 5 தீயணைப்பு வாகனங்களும் மற்றும் ஒரு உயர் ரக தீயணைப்பு வாகனம் உதவியுடன் தீயை கட்டுக்குள் போராடிக் கொண்டு வந்தனர்.

5 மாடி கொண்ட அந்த பிஎஸ்என்எல் அலுவலகத்தில் முதலாம் மாடியில் உள்ள எக்ஸ்சேஞ்ச் அலுவலக அறையில் மின் கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.

காலை 4 மணிக்கு தீ வெளியே தெரிய தொடங்கியதாக அங்கிருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இருந்தாலும் தீயணைப்பு படையினர் ஐந்து முப்பது மணி அளவில் தான் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் தகவல் தெரிகின்றனர்.

தீ விபத்தின் காரணமாக மண்ணடி பகுதி எங்கும் புகைமூட்டம் நிலவி வருவதால் அப்பகுதி மக்களுக்கு அந்த புகையின் காரணமாக கண் எரிச்சலும் மூச்சு திணறலும் ஏற்பட்டது. மேலும் புகை மூட்டம் காரணமாக அந்த வழியாக செல்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.