சென்னை: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 10,663 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 338 குழந்தைகளுக்கு ரூ.16.90 கோடியும், பெற்றோரில் ஒருவரை இழந்த 10,325 குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடியும் என மொத்தமாக 10,663 குழந்தைகளுக்கு ரூ.326.65 கோடி நிதியுதவி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 இன் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட 373 குழந்தைகளுக்கு ரூ.6.99 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 20 புதிய அறிவிப்புகள்...