- 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
- 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு என 1.03 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி நிலை அறிக்கை 2021-22: முழு விவரம் - உடனுக்குடன்: மத்திய நிதி நிலை அறிக்கை 2021-22 இன்று தாக்கல் ஆகிறது
13:06 February 01
ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் தொடர் உரை நிகழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:59 February 01
வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 6.48 கோடியாக அதிகரிப்பு
- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் சலுகை வழங்க வழிவகை செய்யப்படும்
- குறைந்த விலை வீடுகளுக்கான வரிச்சலுகை 2022 மார்ச் மாதம் வரை நீடிக்கும்
- வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
- வரி தொடர்பான பிரச்னைகளை தீர்க்க புதிய கமிட்டி அமைக்கப்படும்
- ஜிஎஸ்டி முறையை மேலும் எளிமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
- ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
- வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 6.48 கோடியாக அதிகரித்துள்ளது
- தங்கத்தின் மீதான சுங்கவரி 10% குறைப்பு
12:41 February 01
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விதிவிலக்கு:
- உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் தான் குறைவாக வசூலிக்கப்படுகிறது
- வரி விதிப்பின் முக்கியத்துவத்தை திருக்குறளைச் சுட்டிக்காட்டி விளக்கினார் நிதியமைச்சர்
- பென்ஷன் மட்டும் பெறும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை
- வேளாண்பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டத்தில் 1.68 கோடி விவசாயிகள் பதிவு
- வரித்தணிக்கை வரம்பு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்வு
12:38 February 01
பொருளாதாரத்தைச் சீரமைக்க ரூ.80ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
- பொருளாதாரத்தைச் சீரமைக்க ரூ.80ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
- 2025-26இல் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை 4.5%ஆக குறைக்க இலக்கு
- படித்து முடித்த பிறகு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு
- பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்
12:29 February 01
திறக்குறளை சுட்டிக்காட்டி பேசிய நிர்மலா சீதாராமன்
'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு' எனத் திறக்குறளை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் உரையைத் தொடர்கிறார்.
குறள் விளக்கம்:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசின் நிதி வருவாயைப் பெருக்கி அதைப் பாதுகாத்து திட்டமிட்டு செலவிடுவதே திறமையான ஆட்சிக்கு இலக்கணமாகும்.
12:26 February 01
பட்ஜெட்டின் ஆறாவது தூண்: திறம்மிகு நிர்வாகம்
- செவிலியர்கள் நலனுக்காக தனி ஆணையம் அமைக்கப்படும்
- வரும் டிசம்பரில் ஆளில்லா விண்கலத்தை இந்தியா செலுத்தும்
- டிஜிட்டல் வடிவத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்
- ரூ. 3799 கோடி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஒதுக்கீடு
- நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.5 %ஆக இருக்கும்
12:23 February 01
நாடுமுழுவதும் உள்ள பட்டியலின மாணவர்களுக்கு ரூ.30,000 கோடிக்கும் மேல் ஊக்கத்தொகை
- இ-நாம் மண்டி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 1,000 பண்ட சாலைகள் இணைக்கப்படும்
- கூடுதலாக 100 புதிய சைனிக் பள்ளிகள் கட்டப்படும்
- லடாக்கில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
- நாடு முழுவதும் உள்ள பட்டியலின மாணவர்களுக்கு ரூ.30,000 கோடிக்கும் மேல் ஊக்கத்தொகை
- சிறு, குறு தொழில்களுக்கு ரூ.15ஆயிரம் கோடி ஒதுக்கீடு
12:11 February 01
சென்னை, கொச்சின் உள்ளிட்ட 5 மீன்பிடித்துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்
பட்ஜெட்டின் மூன்றாம் தூண்: உள்ளடக்கிய வளர்ச்சி
- எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையில் பட்ஜெட் தாக்கல்
- எல்.ஐ.சி.பங்குகளில் ஐபிஓ அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பங்குகள் விற்கப்படும்.
- இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும்.
- வேளாண்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நடைமுறை தொடரும்.
- மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுகிறது
- 43 லட்சம் கோதுமை பயிரிடும் விவசாயிகள் பலனடைந்துள்ளனர்
- குறைந்தபட்ச ஆதார விலை மூலம் 1.4 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்
- விவசாயிகள் 1.5 மடங்கு கூடுதல் வருவாய் பெறுவதை குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யும்
- தானிய கொள்முதல் மூலம் ஒரு ஆண்டில் 1.5 கோடி விவசாயிகள் கூடுதலாகப் பயனடைந்துள்ளனர்
- ஒரு நாடு ஒரு ரேஷன் மூலம் 32 மாநிலங்களில் 69 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர்.
- நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.10ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- சென்னை, கொச்சின் உள்ளிட்ட 5 மீன்பிடித்துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்
- ரூ.16.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
12:07 February 01
தமிழ்நாட்டில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா
- தமிழ்நாட்டில் பல்நோக்கு கடல் பாசி பூங்கா அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
11:59 February 01
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் 2022க்குள் முடிக்கப்படும்
- நுகர்வோரே மின்நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் வசதி அறிமுகம்
- பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் 2022க்குள் முடிக்கப்படும்
- ஏர் இந்தியா, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஆயில், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட தனியார்மயத் திட்டங்கள் அடுத்தாண்டுக்குள் முடிக்கப்படும்
11:54 February 01
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49%லிருந்து 74%ஆக அதிகரிப்பு
- மாநில மின்பகிர்மானக் கழகங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்
- நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023க்குள் மின்மயமாகும்
- காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49%லிருந்து 74%ஆக அதிகரிப்பு
- அரசு வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20ஆயிரம் கோடி ஒதுக்கீடு
11:50 February 01
ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு
- உஜ்வலா திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் மேலான மக்கள் பயன்பெறுவர்
- மின்விநியோகம் செய்யும் நிறுவனங்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் திட்டம் அறிமுகம்
- நாட்டின் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும்
- மின்சாரத்துறைக்கு ரூ.3.05 லட்சம் கோடி ஒதுக்கீடு
- ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்
- பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்த புதிய ஒருங்கிணைந்த சட்டம்
- காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 லிருந்து 74 விழுக்காடாக உயர்வு
- அரசு வங்கிகளுக்கு கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
11:49 February 01
குறைந்த பட்ச காப்பீட்டுத்தொகை இருந்தாலே, மரணங்களுக்கு முழு இழப்பீட்டுத்தொகை தரப்படும்.
11:44 February 01
சென்னை மெட்ரோவுக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; குமரி வரை தொழில் வழித்தடம்
- 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து அகல ரயில்பாதைகளையும் மின்மயமாக்க இலக்கு
- பேருந்து வழித்தடங்களை விரிவுபடுத்த ரூ.18ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.63ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- மும்பை - கன்னியாகுமரி இடையே தொழில் வழித்தடம் அமைக்க முடிவு
- நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் விரைவில் மெட்ரோ ரயில் சேவை
11:40 February 01
தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள்
- சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமுக்கு சாலைக் கட்டுமானத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.1.08 கோடி மதிப்புள்ள சாலை கட்டுமானத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மூலதன செலவினங்களுக்கு ரூ.5.45 லட்சம் கோடி ஒதுக்கீடு
- ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு
- அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 11,000 கிமீ தேசிய நெடுஞ்சாலை அமைத்து முடிக்கப்படும்
- சாலைத் திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு
- தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படும்
11:38 February 01
தமிழ்நாட்டில் பொருளாதார வழித்தடம்
மதுரை - கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம்
11:29 February 01
- தற்சார்பு சுகாதாரத் திட்டத்திற்கு ரூ. 64,180 கோடி
- தற்காப்பு, குணப்படுத்துதல், முறையான சிகிச்சை ஆகிய 3 அம்சங்களில் கவனம்
- விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதே அரசின் இலக்கு
- இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்
- கரோனா தடுப்பூசிக்கு ரூ.35ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கப்படும்
- அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 2.87 லட்சம் கோடி ஒதுக்கீடு
- தனிநபர் வாகனங்களுக்கு 20ஆண்டுகளுக்குப் பின் தர சோதனை
11:25 February 01
நாட்டில் போக்குவரத்துத்துறையில் 7 ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன. விமானபோக்குவரத்துத்துறை, ரயில்வே துறை ஆகியவற்றில் தேவைப்படும் எரிபொருள்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு உண்டு
11:21 February 01
இந்த பட்ஜெட்டில் ஆரோக்கியம், மாசுபாடு, உற்பத்தித்துறையில் பிரத்யேக நிதி ஒதுக்கீடுகளை எதிர்பார்க்கலாம்- நிர்மலா சீதாராமன்
11:17 February 01
பழைய வாகனங்களில் இருந்து வரும் மாசுபாட்டைக் குறைக்க, அதை தடை செய்ய பரிந்துரைத்துள்ளோம். - நிர்மலா சீதாராமன்
11:15 February 01
3,382 பொதுசுகாதார மையங்கள் 11 மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.
11:11 February 01
ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் 5 மினி பட்ஜெட்களுக்கு இணையானது. கடந்த காலங்களில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள், தொழில் முன்னேற்றம், ஆரோக்கியம், உட்கட்டமைப்பு ஆகியவை சீராக நடந்துள்ளன.
11:09 February 01
இந்த மத்திய நிதி நிலை அறிக்கை 2021-22 பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிச்சயம் இருக்கும்.
11:07 February 01
ரவீந்திர நாத் தாகூரின் கவிதை வரிகளைச் சுட்டிக்காட்டி, நிர்மலா சீதாராமன் பேசுகிறார்
11:05 February 01
இதுவரை இல்லாத நோய்த்தொற்று காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன் - நிர்மலா சீதாராமன்.
இன்று நமது இந்திய 2 தடுப்பூசிகளை தயாரித்து முன்னொடியாகத் திகழ்கிறது - நிர்மலா சீதாராமன்
11:01 February 01
2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்கத் தொடங்கினார்.
10:54 February 01
மத்திய அமைச்சரவை மத்திய நிதி நிலை அறிக்கை 2021-22ஐ தாக்கல் செய்ய இருக்கும் நிர்மலா சீதாராமனை அங்கீகரித்து தாக்கல் செய்ய அனுமதி கொடுத்தது.
10:49 February 01
டெல்லி: காங்கிரஸ் எம்.பி.-க்களான ஜஸ்பிர் சிங், குர்ஜித் சிங் அஜூலா ஆகியோர், வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு நிற உடையணிந்து மக்களவை வந்தனர்.
10:47 February 01
டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
10:31 February 01
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான ஹேமமாலினி மத்திய நிதி நிலை அறிக்கை 2021-22 நிகழ்வை ஒட்டி, மக்களவைக்கு வருகை தந்தார்
10:08 February 01
மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
09:19 February 01
நாட்டில் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் நிதி அமைச்சக அலுவலகத்தில் இருந்து மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய புறப்பட்டனர். அப்போது நாட்டில் முதல்முறையாக காகிதம் இல்லாமல் தாக்கல் செய்யப்படும், நிதி நிலை அறிக்கையை வைத்திருக்கும் டேப்லெட்டை பத்திரிகையாளர்களுக்கு முன் காட்டினர்.
08:57 February 01
மத்திய நிதி அமைச்சகத்துறை அலுவலகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் மத்திய நிதி அமைச்சக அலுவலகத்துக்கு வருகை தந்தார். இந்நிலையில் இன்று(பிப்.1) மத்திய நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்.
07:25 February 01
கரோனா பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய இருக்கிறார். இது நாட்டின் முதல் டிஜிட்டல் நிதி நிலை அறிக்கை ஆகும். நிதி நிலை அறிக்கையின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டு, அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கங்களில் வெளியிடப்படயிருக்கிறது.