ETV Bharat / city

சென்னையில் 3 உணவகங்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம் - ரூ.52 ஆயிரம் அபராதம்

சென்னையில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விதிகளை மீறிய மூன்று உணவகங்களுக்கு 52ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 3 உணவகங்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம்

author img

By

Published : Aug 21, 2021, 11:09 PM IST

சென்னையில் இயங்கி வரும் உணவகங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, சுகாதாரமான முறையில் உணவு பொருள்கள் கையாளப்படுகின்றனவா எனவும் பதப்படுத்திய உணவுகளின் தன்மை குறித்தும் ஆய்வு செய்ய ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மண்டல நல அலுவலரின் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுகள் உணவகங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், சமையலறை புகைப்போக்கி, மேல்நிலைத்தொட்டி, கழிவறை மற்றும் கழிவுநீரகற்றும் வசதி முறையாக உள்ளனவா என்பதை எல்லாம் ஆய்வு செய்யும்.

அதன்படி, கடந்த 19ஆம் தேதியன்று அனைத்து மண்டலங்களிலுள்ள 45 பகுதிகள் அடங்கிய 155 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உணவகங்களுக்கு அபராதம்

இந்த ஆய்வுகளின்போது 61 உணவகங்களில் உணவு பதப்படுத்துதல், சேமிப்பு முறைகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த உணவகங்களில் உணவு பதப்படுத்துதல், சேமிக்க முறையான வழிமுறைகளை பின்பற்றுமாறு உணவகங்களின் மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், எட்டு உணவகங்களில் உடல்நலத்திறகு கேடு விளைவிக்கும் 16 கிலோ எடையுள்ள ஆரோக்கியமற்ற உணவு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அவர்களிடம் பொது சுகாதார சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

பெருமளவு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட மூன்று உணவகங்களுக்கு தலா 52ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்களிடம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் மாஸ்க்: ’இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.