ETV Bharat / city

பள்ளிகளை திறக்க வேண்டும் - தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு - பாதுகாப்பின்றி நடமாடும் பள்ளி மாணவர்கள்

பள்ளிகளைத் திறக்க வேண்டும் என தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பினர் கேடடுக்கொண்டுள்ளனர்.

கல்வி
கல்வி
author img

By

Published : Jan 10, 2022, 7:10 AM IST

சென்னை: தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆறுமுகம், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையவழி கோரிக்கை பதிவில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு அரசு அனுமதி அளிக்காவிட்டால், ஜனவரி 20ஆம் தேதிக்குப் பின்னர் அரசின் வழிமுறைகளின் படி, செயல்படும் இல்லம் தேடி கல்வித்திட்டத்தை பின்பற்றி தனியார்ப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா, ஒமைக்ரான் தொற்று எவ்வளவு உச்சத்திலிருந்தாலும் - கோவில் பூசாரிகள்,அனைத்து மத பக்தர்கள், திருமண வீட்டார், இறப்பு வீட்டார், அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட ஆசிரியர்கள், சிறு குறு வியாபாரிகள், கட்டிடத் தொழில் முதலாளிகள், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை 100% தமிழ்நாடு அரசு கண்காணித்து வருகின்றது.

சுயநிதி பள்ளிகளை மட்டும் பழி வாங்குவதா?

தமிழ்நாடு அரசு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வருடமும் சராசரியாக தமிழ்நாட்டின் 50 % மாணவர்களுக்கு கல்வி அளித்து, சுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு தரமான அடிப்படை கல்வியை வழங்கி வருகிறது.

இந்திய அளவில் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக திகழ வழிவகை செய்துள்ள நிலையில், தனியார் சுயநிதி பள்ளிகளை மட்டும் பழிவாங்கும் நோக்கோடு நடத்துவது ஏன் என புரியவில்லை.

தனியார் பள்ளிகளுக்கு 20 மாதங்களுக்கு பின் பல கடன்களை பெற்றுப் பராமரிப்பு செய்து பள்ளி திறக்க வைத்து உடனடியாக மூடியதாலும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பின்றி பள்ளி மாணவர்கள்

பள்ளிகள் விடுமுறை என்பதால் வீடுகளில், தெருக்களில், குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நடமாடுகின்றனர். விடுமுறை என்பதால் குடும்பத்தோடு சுற்றுலா தளங்களில் கூடுகின்றனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்க வேண்டும் என்றால் பள்ளிகளைத் திறந்து தீவிர வழிகாட்டுதல்களோடு நடத்தினால், பொது இடங்களில் கூட்டம் குறைந்து தொற்று குறைய வாய்ப்பு ஏற்படும்" என்றார்.

பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு வாரத்தில் 2 நாட்கள் கூட மாணவர்களை வரவைக்கலாம். ஒரு வகுப்பில் 10 மாணவர்களைக் கூட அமர வைக்கலாம். ஆனால், பள்ளிகளை மொத்தமாக மூடும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்தே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.

மாத வருவாய் ரூ.25,00 கோடி

ஏனென்றால், பள்ளிகள் நடந்தால் தமிழ்நாட்டில் மட்டும் தனியார் பள்ளிகளில் சுமார் 70 லட்சம் பெற்றோர், மாதந்தோறும் சுமார் ரூ.2,500 கோடி கல்விக் கட்டணமாக செலுத்துவார்கள் என்று தெரிவித்தார். அக்கட்டணம் சுமார் 15,000 பள்ளி நிர்வாகத்திற்கும், சுமார் 6 லட்சம் பள்ளி ஊழியர்களுக்கும் மட்டுமே செல்லும். அதில் பாதி அளவு பணம் மட்டுமே செலவிடப்படும். மீதி பணம் பள்ளி நிர்வாகிகளின் பள்ளி முதலீடாகவும், ஊழியர்களின் சேமிப்பாகவும் இருக்கும் என்று கூறினார்.

டாஸ்மாக் கடைக்கு செல்லும் பணம்

பள்ளிகளை மொத்தமாக மூடினால் அந்த ரூ.2,500 கோடியில் குறைந்த பட்சம் ரூ.2,000 கோடியாவது, பெற்றோர் செலவு செய்வார்கள். அதில், குறிப்பிட்ட தொகை டாஸ்மாக் கடைக்கும், Amazon, Flipkart போன்ற E - Commerce நிறுவனங்களில் Online ல் Things Order பண்ணுவதற்கும், Zomato, Swiggy போன்ற Online Food Delivery நிறுவனங்களில் Food Order செய்வதற்கும் செலவிடப்படும். வீட்டில் உள்ள அனைத்து Cell Phone ம் Android ஆக மாற்றப்படும், அனைத்து Android Cell லிலும் Net Data Recharge செய்யப்படும் என்றார்.

நிர்பந்தம்

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் யாரோ, எந்தெந்த அமைப்போ அரசை நிர்பந்தப்படுத்தி பள்ளிகளை மூட வைக்கிறதோ? என எண்ணத் தோன்றுகிறது. இன்றைய சூழலில் கரோனாவோ, ஒமைக்ரானோ, பரவல் மிக மிக அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், இவற்றால் மிக மிகக் குறைந்த உயிரிழப்புகளே ஏற்படுகிறது.

சாதாரண சளி மற்றும் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளே உள்ளது. ஆகவே, பொதுமக்கள் மிகக் கவனமாக நடமாட வேண்டும் என வலியுறுத்துவது மிக மிக அவசியம். அதேசமயம், நடமாடவே கூடாது என வற்புறுத்துவது மிக மிக அபத்தம் என்றும் அவர் கூறினார்.

சம்பளம்

தமிழ்நாட்டு அளவிலுள்ள சுமார் 140 லட்சம் பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு சென்றாலும் வீட்டிலிருப்பதைப் போலவே, ஏன் வீட்டில் இருப்பதை விட பாதுகாப்பாகவே இருப்பார்கள், அதுவும் தனியார் பள்ளிகளில் பயிலும் சுமார் 70 லட்சம் மாணவர்கள் மிக மிகப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றார்.

ஒருவேளை அரசுப் பள்ளிகளில் வசதி குறைவாக இருக்கலாம். பல பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டதால் பள்ளிகள் நடத்த கட்டடம் உடனடியாக தயாராகாமல் இருக்கலாம். அப்படியெனில், அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி விடலாம் என்று பேசினார்.

அரசுப் பள்ளிகளை மட்டும் மூடலாம்

அரசுப் பள்ளிகள் எத்தனை ஆண்டுகள் மூடி இருந்தாலும் வேலையே செய்யாமல் 100% சம்பளம் கிடைத்து விடுவதால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சந்தோசம்தான் கொள்வார்கள்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நலனில் அரசு அக்கறை கொள்வதாகவே கருதப்படும். அவர்களால் அரசுக்குக் கெட்ட பெயர் இல்லை. ஆகவே, கரோனா விதிமுறைகளை அரசுப்பள்ளிகளில் செயல்படுத்த இயலாது என எண்ணினால் அரசுப் பள்ளிகளை மட்டும் மூடலாம் என்றார்.

கோரிக்கை

தனியார் பள்ளிகளாகிய நாங்கள் அரசு வகுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை 100% பின்பற்றி, பள்ளிகளை நடத்தத் தயாராக உள்ளோம். ஆகவே, உடனடியாக பள்ளிகளை திறக்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தனியார்ப் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைக்கிறது என்று கூறினார்.

ஒருவேளை ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பின் திறக்கப்படாமல் இருந்தால், தினமும் தீவிரமாக Online Class நடத்தி வாரத்தில் ஒரு நாள் ஒரு வகுப்பை (அ) 2 வகுப்புகளைப் பெற்றோர்களின் அனுமதியுடன் பெற்றோரோடு பள்ளிக்கு வரவைத்து, அந்தந்த வாரத்தில் Online Class -ல் நடத்தியவற்றை மாணவர்கள் சரிவரப் படித்து Home work செய்துள்ளார்களா? என Check & Verify பார்க்கலாம் என எண்ணியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது பள்ளி வாகனங்களில் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வரும் சூழலுள்ள பள்ளிகளில், பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு அரசு அனுமதித்துள்ள 50% இருக்கைகள் என்பதையும் முறையாகப் பின்பற்றுவோம் என்றார்.

தன்னார்வலர்களாக ஆசிரியர்கள்

அரசின் சமீபத்திய இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வ ஆசிரியர்கள் செயல்படும் அதே நடைமுறையைப் பின்பற்றி, ஒரு பள்ளியில் ஒரு நேரத்தில் ஒரு ஆசிரியருக்கு 20 மாணவர்களுக்கு அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வோம்.

இல்லம் தேடி கல்வியில் உள்ள தன்னார்வ ஆசிரியர்கள் பின்பற்றும் அதே நடைமுறைகளையே தனியார் பள்ளிகளாகிய நாங்களும் பின்பற்ற உள்ளோம். இல்லம் தேடி கல்வி நடத்த அனுமதி உள்ளபோது எங்களது இந்த நடைமுறைக்கும் எவ்வித சட்டச் சிக்கலும் இருக்காது என்றே கருதுகிறோம் என மாநிலத் தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Full Curfew: வெறிச்சோடிய விருதுநகர் மாவட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.