ETV Bharat / city

மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-இன் வழித்தடங்கள் நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்படும்! - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2இன், வழித்தடம் மூன்று, நான்கு மற்றும் ஐந்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

assembly
assembly
author img

By

Published : May 7, 2022, 6:23 PM IST

சென்னை: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார்.

நிதித்துறை:

  • கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை, அரசு தகவல் தொகுப்பு விபரம் மையம், ஓய்வூதிய இயக்ககம் மற்றும் சிறுசேமிப்பு இயக்குனரகம் ஆகியவற்றின் செயல்திறனை மேம்படுத்த அரசு அத்துறைகளை மறு சீரமைக்கும்.
  • அரசு பொது நிறுவனங்களின் சீர்திருத்தங்கள், செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கும் செலவீனத்தை குறைப்பதற்கும் விரிவான ஆய்வு ஒன்றை அரசு மேற்கொள்ளும்.
  • 10 கோடி ரூபாய் செலவில் மாநில பொது நிறுவனங்களின் கழகத்தின் மேலாண்மை நவீனமாக்கப்பட்டு வலுப்படுத்தப்படும்.
  • கடன் வாங்குவதால் ஏற்படும் செலவை குறைப்பதற்காகவும், மாற்று கடன் சார்ந்த இடர்களை குறைப்பதற்காகவும், கடனை ஆய்வு செய்து மறு சீரமைப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.
  • நிகழ்நேர தரவுகளின் அடிப்படையில் அரசு முடிவுகளை மேற்கொள்வதற்காக பேரியல் பொருளாதாரம் மற்றும் நிதி குறியீடுகளின் போக்குகளை கண்காணிக்கவும், பகுப்பாய்வு செய்வதற்கும் ஒரு நிதி பகுப்பாய்வு மையம் நிறுவப்படும்.
  • நிதித்துறையின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தேவையான பயிற்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய பயிற்சி கொள்கை உருவாக்கப்படும்.

மனித வள மேலாண்மை துறை:

  • அரசு பணியிடங்களுக்கும், போட்டித் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களுக்கும் ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ஆய்வு குழுக்களால் இணையவழியில் துறை அலுவலர்களுக்கு முன்னோடி குறுகிய மற்றும் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும். இதற்காக 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலைய வளாகம் பசுமை ஆக்கப்படும். இதற்காக 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மாநில குடிமை பணி அலுவலர்களுக்கு இடைக்காலப் பயிற்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். இதற்காக ஆண்டுதோறும் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை:

  • நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படும்.
  • சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வருடாந்திர செயல் திட்டத்தினை, போபாலில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளியுடன் இணைந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் கீழ் நகர் ஊரமைப்பு இயக்கத்தால் தயாரிக்கப்படும் விரிவான மண்டல திட்டத்தின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும்.
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1 நீட்டிப்பு திட்ட வழித்தடத்தில் உள்ள நிலையங்களை அணுகும் வசதிகள் மேம்படுத்தப்படும். இதனை 30 கோடி ரூபாய் செலவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்.
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2, வழித்தடம் நான்கை பூந்தமல்லியை புறவழிச் சாலையில் இருந்து திருப்பெரும்புதூர் வரை நீடிப்பது குறித்த சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் ஐந்தை திருமங்கலத்தில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பதன் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் மூன்றை சிறுசேரியில் இருந்து, கேளம்பாக்கம் வரை நீட்டிப்பதன் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2, வழித்தடம் மூன்றை கேளம்பாக்கத்தில் இருந்து மாம்பாக்கம் மற்றும் வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  • சென்னை நகர போக்குவரத்து அமைப்புகளை ஒருங்கிணைத்து பெருந்திரள் துரித போக்குவரத்து அமைப்பின் இயக்கம் மற்றும் பராமரிப்பினை தென்னக ரயில்வேயிடமிருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துக் கொள்ளுதல்.
  • சென்னை புறநகர் ரயில் அமைப்பின் குறிப்பாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை தென்னக ரயில்வேயுடன் கூட்டு சேர்ந்து குளிர்பதன ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்வதன் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுகால நன்மைகளும்:

  • பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதை எளிமை ஆக்குதல்.
  • ஓய்வூதியர் நலனுக்காக 50 கோடி ரூபாயை சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் சிறிய வகை பேருந்துகள் அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.