ETV Bharat / city

பிணையில் வந்த பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை!

சென்னையில் பிணையில் வெளிவந்த பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை
பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை
author img

By

Published : Mar 5, 2021, 10:21 AM IST

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சிவக்குமார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் மயிலாப்பூர், ஜாம்பஜார், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி சிவக்குமார் உத்தரமேரூரில் தனது சகோதரி வீட்டில் தலைமறைவாக இருந்த பொழுது காவலர்கள் துப்பாக்கி முனையில் கைதுசெய்தனர். அவரிடமிருந்து பல்வேறு பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையில், பிணையில் வெளிவந்த சிவக்குமார் சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனி 2ஆவது தெருவில் அலுவலகம் வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். மேலும், ஜஸ்டின் என்பவருக்கு குறைந்த காலகட்டத்தில் ரூ.10 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். அந்தக் கடன் தொகையை வாங்குவதற்காக ஜஸ்டினின் அலுவலகத்திற்கு சென்றபோது, சிவகுமாரை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் மயிலாப்பூரில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அசோக்நகர் காவல்துறையினர் சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஜாம்பஜாரை சேர்ந்த பிரபல ரவுடி தோட்டம் சேகர் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே இந்தக் கொலை சம்பவம் அரங்கேறி இருப்பதாக காவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து பல்வேறு கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, பல வருடங்கள் கழித்து பழிக்குப்பழி கொலை சம்பவம் அரங்கேறியுள்ள இந்தக் கொலை சம்பவத்தால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி சென்னை மாநகர காவல்துறை கணக்கெடுத்து வெளியிட்ட ரவுடிகளின் பட்டியலில் மிகமுக்கியமான ரவுடியாக பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையும்ப் படிங்க: பன்னாட்டு கடல் எல்லையை கடந்து செல்லக் கூடாதென மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- நீதிபதிகள் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.