சென்னை: ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழ், வேலை இல்லாதற்கான சான்றிதழ், திருமணம் அல்லது மறுமணம் செய்ததற்கான சான்றிதழ்களை, அந்தந்த மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தொற்று முதல் அலையின் போது ஓய்வூதியதாரர்கள் உடல் நலன் கருதி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஓப்படைக்கலாம் என அரசு அறிவித்திருந்திருந்தது; எதிர்பார்த்த அளவுக்கு கரோனா தொற்றுப் பரவல் குறையாததால் சான்றிதழ் ஒப்படைக்க விலக்கு அளிக்கபட்டது.
இந்நிலையில், கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழ்நாட்டில் தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்த ஆண்டுக்கான சான்றிதழைகளையும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு மாற்றாக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், மாதத்தில் உரிய அலுவலர்களிடம் ஒப்படைகலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று அதிகம் பாதிக்க கூடிய வயதினராக ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இருப்பதால் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கால நீட்டிப்பு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி: அரசு அலுவலர்களின் ஒரு நாள் ஊதியம் ஏற்பு