சென்னை: நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா சட்டப்பேரவையில், நிறைவேற்றப்படும் என அறிவிக்கை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு நடக்கவிருப்பது முதலமைச்சரின் மனதுக்கு விரும்பமில்லாத நிகழ்வாக இருக்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளன்று, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தரப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில், நீட் தேர்வின் அச்சத்தால் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு வரும் நிலையில், இந்த நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் புதிய சட்ட மசோதாவை இன்று (செப்.13) முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார்.
இதையும் படிங்க: நீட் மரணம் - தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு நிதியளித்த உதயநிதி