ETV Bharat / city

தேர்வு பயத்தால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை - student suicide in salem

நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று (செப்.12) சேலம் மாவட்டத்தில் தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து நாமக்கல்லில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

exam fear death in tamil nadu
exam fear death in tamil nadu
author img

By

Published : Sep 13, 2021, 10:33 PM IST

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள கூழையூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (52). பிவிசி பைப் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு, நிஷாந்த் (22), தனுஷ் (20) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

நிஷாந்த் தனியார் கல்லூரியில் பொறியியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனுஷ், மேட்டூர் மாசிலாபாளைத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்த நிலையில், இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று(செப்.12) மூன்றாவது முறையாக மேச்சேரி காவேரி கல்லூரியில் நிஷாந்த் நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில், காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு தேர்வு அச்சம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு பயம் காரணமாக கல்லூரி மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஈகாட்டூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(20) என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு இன்று(செப்.13) செயல்முறை தேர்வு நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், இன்று(செப்.13) காலை மாம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேர்வு பயத்தால், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் தற்கொலை சம்பவங்கள் இளைய சமூதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. எனவே பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினரோ, நண்பரோ யாராக இருந்தாலும் மன அழுத்தத்தில் இருக்கும் மாணவனுக்கு உறுதுணையாக இருங்கள். உங்களில் யாருக்காவது அப்படி ஏதும் எண்ணங்கள் இருந்தால், கீழுள்ள எண்ணை அழையுங்கள்.

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்

Helplines

  • Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours)
  • State suicide prevention helpline – 104 (24 hours)

இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.