அதிமுக ஆட்சியில், 2011 முதல் 2015 போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், செந்தில்பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால், இவ்வழக்கை நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்பு செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவிற்காக மார்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: முறைகேடு எதிரொலி - சென்னையில் மட்டும் நடத்தப்படும் தொல்லியல் அலுவலர் தேர்வு