ETV Bharat / city

முன்னாள் டிஜிபி உடலுக்கு காவல் துறை உயர் அலுவலர்கள் அஞ்சலி! - முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநர் கே ராதாகிருஷ்ணன்

சென்னையில் உடல் நலக்குறைவால் தமிழ்நாட்டின் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநர் கே. ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் (நவ. 3) காலமானார். அவரது உடலுக்கு, தற்போதைய காவல் துறை தலைமை இயக்குநரான திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ex dgp k radhakrishnan funeral
ex dgp k radhakrishnan funeral
author img

By

Published : Nov 5, 2020, 8:20 AM IST

சென்னை: உடல் நலக்குறைவால் மரணமடைந்த தமிழ்நாடு காவல் துறையின் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநர் உடலுக்கு, தற்போதைய இயக்குநரான திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் உடல்நலக் குறைவால் தமிழ்நாட்டின் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநர் கே. ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் (நவ. 3) காலமானார். அவருக்கு வயது 92. 1983-87 வரை தமிழ்நாடு காவல் துறை தலைவராக இருந்தவர் கே. ராதாகிருஷ்ணன். இதற்கு முன் சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும், சென்னை மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியவர்.

சென்னை உளவுப்பிரிவு காவல் துணைத் தலைவர், சட்டம் ஒழுங்கு தலைவர் என மிக முக்கிய அரசுப் பதவிகளை வகித்த இவர், நேர்மையான அரசு அலுவலர் எனப் பெயர் பெற்றவர். 'கிறக்கி' என்ற பெயரில் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

இவர் போக்குவரத்து துணை ஆணையராக இருந்தபோது தான் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது. இதற்காக ஜப்பான் சென்று அங்கு உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு வந்த பிறகு அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது.

மறைந்த ராதாகிருஷ்ணன், முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், அண்ணா , எம்ஜிஆர் ஆகியோர் தலைமை வகித்த அரசின் கீழ் பணியாற்றியவர். அவர்களுடன் நல்ல நட்புறவில் இருந்தார் என்பதும் பெருமைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.

மூன்று வாரங்களுக்கு முன்பு, வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். இச்சூழலில், சென்னை அடையாறு சாஸ்திரி நகரிலுள்ள தனது வீட்டில் கே.ராதாகிருஷ்ணன் மரணமடைந்தார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இறுதி அஞ்சலிக்காக கே. ராதாகிருஷ்ணனின் உடல் சாஸ்திரி நகரிலுள்ள, அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உடன் காவல் துறை அலுவலர்கள் சேர்ந்து அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.