ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am - ஈடிவி பாரத்தின் செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv
etv
author img

By

Published : Dec 5, 2020, 7:11 AM IST

1. சிறப்பு ரயில்களின் திருத்தப்பட்ட அட்டவணை

திருத்தப்பட்ட அட்டவணையின்படி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

2. ஆண், பெண் குரலில் பாடும் கன்னட குயில்!

நுரையீரல் காற்று, கழுத்தில் நிலைகொண்டு உதடு தொட்டு பாடலாகிறது. ஒவ்வொரு பாடகரும் தங்களுக்கென்று தனித்த மாறுபட்ட குரல் வளங்களை கொண்டுள்ளனர். இங்கே பாடகர் ஒருவர் ஆண், பெண் என இரண்டு குரலிலும் எளிதாக பாடல்களைப் பாடுகிறார். இவர் பெயர் கருணாகர். மங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெண்ணின் குரலில் இவர் பாடினால், பாடுவது ஆண்தான் என்பதை யாராலும் கண்டறிய இயலாது. ஆண், பெண் குரலில் பாடும் கன்னட குயில் குறித்து பார்க்கலாம்.

3. இந்தோனேசியாவில் கடும் வெள்ளம்; லட்சக்கணக்கானோர் தவிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 20 லட்சம் மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

4. முகக்கவசம் அணியுங்கள், இடைவெளிவிட்டு நில்லுங்கள் - அசத்தும் ஜப்பான் ரோபோட்

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால், அதை அணியச் சொல்வது, இடைவெளி விட்டு நிற்கச் சொல்வது என ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் ‘ரோபோவி’ என்னும் ரோபோட் அசத்திவருகிறது.

5. கடற்படை நாள் கொண்டாட்டம்: மெரினா கடற்கரை அருகே அலங்கரிக்கப்பட்ட கப்பல்

கடற்படை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கம் அருகே, இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் நங்கூரமிட்டு, அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கடற்கரைக்கு மக்கள் அனுமதிக்கப்படாததால் பார்வையாளர்கள் இன்றி கப்பல் நின்றுகொண்டிருந்தது.

6. இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!

குளிர்காலங்களில் வரும் வைரஸ் பாதிப்பான குளிர்காய்ச்சல் (இன்ஃப்ளூயன்ஸா) அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

7. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குரங்குகள்!

குரங்கு இனத்தில் மிகச் சிறியதான குக்குரங்கு இரண்டு பிரிட்டனில் உள்ள செஸ்டர் வனவிலங்கு பூங்காவில் ஒட்டிப் பிறந்துள்ளன.

8. புதிய வடிவம் எடுத்த டி.பி.எஸ். வங்கிக்கு ரூ.2,500 கோடி மூலதனம்!

புதிதாக உருவெடுத்துள்ள டி.பி.எஸ். இந்தியா வங்கிக்கு சுமார் ரூ.2,500 கோடி மூலதனத்தை அந்த வங்கியின் தலைமை அளித்துள்ளது.

9. குண்டும், குழியுமான சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

சென்னை: பூவிருந்தவல்லி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பின்னே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

10. ஐஎஸ்எல்: சேத்ரியின் அசத்தல் கோலால் சென்னையை வீழ்த்தியது பெங்களூரு!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.