1.டிஐஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை!
வேலூர் மத்திய சிறை துறை டிஐஜி ஜெயபாரதி வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனையி ஈடுபட்டுள்ளனர்.
2.தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையில் சிறை: மத்திய அமைச்சரிடம் கோரிக்கைவைத்த ஸ்டாலின்!
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
3.'தமிழன் எம்மொழியும் கற்கத் தயாராக உள்ளான், ஆனால் திணித்தால் காறித் துப்பிவிடுவான்' - கமல் ஹாசன் பேச்சு
தமிழன் எம்மொழியையும் கற்க தயாராக உள்ளான் எனவும், ஆனால் மொழியை திணித்தால் காறித் துப்பிவிடுவான் என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
4.சிலிண்டர் விலை உயர்வு: திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்!
சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என, மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5.மேம்பாலத்தில் சிக்கிய ட்ரான்ஸ்பார்மர்: வெல்டிங் வைத்ததால் பற்றி எரிந்த தீ!
பாலத்தின் கீழ் சிக்கிய டிரான்ஸ்பார்மரை வெல்டிங் வைத்து அகற்ற முயன்றபோது தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
6.மூலப்பொருட்கள் விலை உயர்வு: காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் சிறு, குறு தொழில்நிறுவனங்கள்!
மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் சிறு, குறு தொழில்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
7.ஜேஇஇ முதன்மைத் தேர்விற்கான தேதி இன்று மாலை அறிவிப்பு!
நடப்பாண்டுக்கான(2021) பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுத் தேதிகள் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
8.மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறங்கிய லண்டன் விமானம் - பயணிகள் தவிப்பு
ஹைதராபாத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, லண்டன் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
9.பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அனுமதி
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் குடியரசு தலைவர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.
10.விவசாயிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும்: ட்விட்டரில் மோதிக்கொள்ளும் சர்வதேச மல்யுத்த வீரர்கள்!
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்த பபிதா போகாட்டுக்கு, அவரின் சகோதரியான வினேஷ் போகாட் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.