ETV Bharat / city

7 மணிச் செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணிச் செய்திச் சுருக்கம்

7 மணிச் செய்திச் சுருக்கம்
7 மணிச் செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 20, 2021, 7:14 PM IST

1.'தீர்ந்தது பெற்றோரின் வேதனை; அரசுப் பள்ளி மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார் ஸ்டாலின்'

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்கு ஆகக்கூடிய கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2.ஆபாச பட விவகாரம்: ராஜ் குந்த்ராவுக்கு பிணை

ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த ராஜ் குந்த்ராவுக்கு, தற்போது பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது டெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த பொது நல மனுவிற்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. மதுரை பறக்கும் பாலம் விபத்து குறித்து விரைவில் அறிக்கை - அமைச்சர் மூர்த்தி

மதுரையில் பறக்கும் பாலம் விபத்து குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு விரைவில் அறிக்கையை வெளியிடுவார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

5. பஞ்சாப் முதலமைச்சராக சரண்ஜித் சிங் பதவியேற்பு

பஞ்சாப் மாநிலத்தின் முதல் பட்டியலின முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்.

6.சொன்னது ஒன்னு செஞ்சது ஒன்னு... கழிவறை கட்டடத்தை திறக்க மறுத்த எம்பி

தர்மபுரியில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி நவீன முறையில் கட்டாத கழிவறையை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறக்க மறுத்தார்.

7. தேர்தல்களில் மகளிருக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்க வேண்டும் - கனிமொழி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதேபோல சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களிலும் மகளிருக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

8. ‘தமிழகத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்’ - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டிற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

9.IPL 2021 KKR vs RCB: வெற்றியுடன் தொடங்குமா கோலி & கோ

ஐபிஎல் 2021 தொடரின் 31ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

10. விநாயகரின் ஆசிர்வாதம் அடுத்த வருடம்வரை இருக்கட்டும் - ஷாருக்

டெல்லி: விநாயகரின் ஆசீர்வாதம் அடுத்த வருடம் அவரை மீண்டும் பார்க்கும்வரை நம் அனைவருக்கும் இருக்கட்டும் என நடிகர் ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.