வேளாண் நிதிநிலை மீதான விவாதம் இன்று தொடக்கம்
ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாட்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல்செய்தார். இந்த நிலையில் அதன் மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெறுகிறது.

அடுத்த மூன்று நாள்களுக்கு மழை
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இன்றுமுதல் மூன்று நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!
இலங்கையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இன்று இரவுமுதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. இரவு 10 மணிமுதல் காலை 4 மணிவரை நீடிக்கும் இந்த ஊரடங்கில் மக்கள் வெளியே வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் சூழ்நிலை குறித்து ஐநா சபை ஆலோசனை
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபன்கள் கைப்பற்றிவரும் நிலையில், அங்கு தற்போது இருக்கும் சூழ்நிலை குறித்து ஐநா பாதுகாப்பு சபையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
