1. கூடுதல் தளர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.23) ஆலோசனை நடத்தவுள்ளார்.
2. டி20 உலக கோப்பை சூப்பர் - 12 சுற்று இன்று தொடக்கம்!
டி 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்-12 சுற்றில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று (அக்.23) மோதுகின்றன.
3.தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரம் இடங்களில், ஆறாவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (அக்.23) நடக்கிறது.
4. கனமழைக்கு வாய்ப்பு!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.