சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை ஆங்கிலம், இந்தியில் வெளியிடப்பட்டது போல் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று மீனவர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று(பிப்.2) பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன என்று பதிலளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: கையூட்டு பெறுவதாகத் தொடரப்பட்ட வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி!