ETV Bharat / city

வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய மாணவர்களைப் பயன்படுத்தக்கூடாது - மனித உரிமைகள் ஆணையம்

பள்ளி வகுப்பறைகளையும், கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநில மனித உரிமை ஆணையம்
HRC
author img

By

Published : Dec 22, 2021, 11:06 PM IST

சென்னை: மதுரை திருமங்கலத்தை அடுத்த கீழஉரப்பனூரைச் சேர்ந்த ஆதிசிவன் என்பவரின் மகன் சிவநிதி. இவர், திருமங்கலத்திலுள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம், வகுப்பறையைச் சுத்தம் செய்யும்படி, வகுப்பாசிரியர், சிவநிதிக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சுத்தம் செய்யும்போது, டெஸ்க் விழுந்து, சிவநிதியின் இடதுகால் விரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வகுப்பறையைச் சுத்தம் செய்யக் கூறியதால் தான் தனது மகன் காயமடைந்துள்ளதால், இது மனித உரிமை மீறல் எனக் கூறி ஆதிசிவன், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்தார்.

இந்தப் புகாரை விசாரித்த ஆணையம், சுத்தம் செய்ய போதுமான ஊழியர்களை நியமிக்காததற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரையோ, வகுப்பாசிரியரையோ குறை கூற முடியாது எனவும் பள்ளி நிர்வகம் தான் காரணம் எனவும் கூறி பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 1 லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும்; பள்ளிகளை கண்காணிக்கும்படி முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்த வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: State Press Council அமைக்க சட்டவிதிகள் உள்ளதா? - இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.