ETV Bharat / city

13 மளிகைப்பொருள்களுக்கான ஒப்பந்தபுள்ளி

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அரசால் அறிவிக்கப்பட்ட 13 மளிகை பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பு வழங்குவதற்காக தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் குறுகிய ஒப்பந்தம் கோரியுள்ளது.

13 மளிகைப்பொருள்களுக்கான ஒப்பந்தபுள்ளி
13 மளிகைப்பொருள்களுக்கான ஒப்பந்தபுள்ளி
author img

By

Published : May 14, 2021, 6:29 PM IST

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்துள்ளது. 300 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மளிகைக் கடைகள், பால்கடை, இறைச்சிக் கடைகளைத் தவிர்த்து பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மே மாதம் 2,000 ரூபாயும், ஜூன் மாதம் 2,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியன்று 2,11,12,798 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் கோதுமை, ரவை, சீனி, பருப்பு உள்ளிட்ட 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பு கரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

13 மளிகைப்பொருள்களுக்கான ஒப்பந்தபுள்ளி
13 மளிகைப்பொருள்களுக்கான ஒப்பந்தபுள்ளி

இந்நிலையில், அரசால் அறிவிக்கப்பட்ட 13 மளிகை பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பு வழங்குவதற்காக தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் குறுகிய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.