பெருநகர் சென்னையில் இன்று (செப். 3) பராமரிப்புப் பணி காரணமாக ஒருசில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார துறை தெரிவித்துள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்களான அடையார் பகுதியில் காந்தி நகர் தெற்கு லக் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, பாண்டி தெரு, நாயுடு தெரு, துலுகானத்தம்மன் தெரு, புது தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, ஈஞ்சம்பாக்கம் ஸ்பார்க்லிங் சான்ட் அவென்யூ, எல்.ஜி.அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் 1, 2ஆவது தெரு, ஈசிஆர் பகுதி, காப்பர் பீச் சாலை ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தாம்பரம் பகுதியில் கோயிலம்பாக்கம் வீராமனி நகர், மணிகண்டன் நகர், ரோஸ் நகர், பாலமுருகன் நகர் ராணி மகால், எம்.ஜி.ஆர் நகர், ராஜகீழ்ப்பாக்கம் வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர், ஸ்ரீராம் நகர், கணேஷ் நகர், ராதாநகர், சாந்தி நகர் 1, 2ஆவது தெரு, கல்லூரி ரோடு, லட்சுமி நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சாரத் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'கூகுள் பே செயலியில் நிலையான வைப்புத்தொகை சேவை அறிமுகம்'