ETV Bharat / city

வெயிலில் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது: தலைமைத் தேர்தல் அலுவலர் - சத்யபிரதா சாஹூ

சென்னை: கொளுத்தும் வெயிலில் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

pradhaa
author img

By

Published : Mar 20, 2019, 1:32 PM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் நடைபெறஇருப்பதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ ஒருசுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தற்போது நிலவிவரும் கடுமையான கோடை வெயில் நேரத்தில் பிற்பகலிலும், பகல் நேரத்திலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதால் தங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக சில அமைப்புகளிடமிருந்தும் குடிமக்களிடமிருந்தும் முறையீடுகள் வந்துள்ளன.

மேலும் இதுபோன்ற கூட்டங்களில் வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்திருப்பதும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கொளுத்தும் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நிழல்தரும் கூரை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் முதலுதவி வசதிகளை செய்து கொடுத்தால்தான் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும்போது யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

எனவே மேற்கண்ட ஆலோசனைகளை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பின்பற்றி பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 20.03.19

குடிநீர், மருத்துவ வசதி அவசியம்செய்ய வேண்டும், வெயிலில் கூட்டம் நடத்தக்கூடாது, கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு..

பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும், கூட்டங்களில் 
குடிநீர் மற்றும் முதலுதவி வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் 
வலியுறுத்தி உள்ளது.
பிரச்சாரக் கூட்டங்களில் வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த 
நடவடிக்கையை எடுப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ல் நடைபெற 
இருப்பதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஒரு 
சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தற்போது நிலவி வரும் கடுமையான கோடை வெயில் நேரத்தில் பிற்பகலிலும் பகல் நேரத்திலும் பொதுக்கூட்டங்கள் 
நடைபெறுவதால் தங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக சில அமைப்புகளிடம் இருந்தும் குடிமக்கள் 
குழுக்களிடம் இருந்தும் முறையீடுகள் வந்துள்ளன.
மேலும் இது போன்ற கூட்டங்களில் வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்திருப்பதும் தேர்தல் ஆணையத்தின் 
கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் 
கோடை காலத்தில் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் 
பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நிழல் தரும் கூரை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை 
செய்யப்பட வேண்டும்.
பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் முதலுதவி வசதிகளை செய்து கொடுத்தால் தான் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும் 
போது யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடியும். 
எனவே மேற்கண்ட ஆலோசனைகளை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், ஏஜெண்ட்கள் அனைவரும் பின்பற்றி 
பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.