ETV Bharat / city

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை! - கல்வி காப்போம் தேசம் காப்போம்

சென்னை: அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி நடைமுறையில் உள்ள சத்துணவு திட்டத்தில் காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என்பன போன்ற வாக்குறுதிகள் வழங்க வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை!

author img

By

Published : Jan 13, 2021, 8:18 PM IST

எதிர்வரும் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு “கல்வி காப்போம், தேசம் காப்போம்” என்ற பெயரில் கல்வித் தொடர்பான கோரிக்கைகளை பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள் :-

அரசின் முழு நிதிப்பொறுப்பில், அனைத்துக் குழந்தைகளும் இலவசமாக, தாய்மொழி வழியே கற்கும் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.

அரசு அனைத்துக் குழந்தைகளுக்கும் 18 வயது வரை சிறந்த சம தரமுடைய கல்வியை அரசின் பொறுப்பில் கட்டணமில்லாமல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

தரமான முன்பருவக் கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் 3 வயதிலிருந்து அளிக்க வேண்டும்.

18 வயது வரை எந்தக் குழந்தையும் குடும்பத் தொழில் உட்பட எத்தகைய தொழிலிலும் ஈடுபடக்கூடாது. கட்டணம் இன்றி சேவை நிறுவனங்களாக இயங்கும் தனியார் பள்ளிகளை மட்டும் அனுமதிக்கலாம்.

கல்விக்கான முழு நிதியும் அரசே செலவழிக்க வேண்டும். நாட்டு வருமானத்தில் குறைந்தபட்சம் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று 1960ஆம் ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இன்றுவரை 4.6 சதவீதத்திற்கும் மிகவில்லை. அனைத்துப் பொருளாதார சமூக மட்டங்களைச் சார்ந்த குழந்தைகளும் எத்தகைய பாகுபாடுமின்றி ஒரே பள்ளிகளில் கற்க வேண்டும். ஒரே அருகமைப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்தால் மட்டுமே சமத்துவம் சகோதரத்துவம் மனித நேயம் ஆகிய மனித விழுமியங்களை வளர்க்க முடியும்.

8ஆம் வகுப்புவரை குழந்தைகள் நடந்து செல்லக்கூடிய தொலைவிலேயே பள்ளிகள் அமைய வேண்டும். அதற்கு அப்பால் வசிக்கும் குழந்தைகள் சேர்க்கப்படக்கூடாது.

அனைத்துப் பள்ளிகளிலும் கட்டுமானங்களை சிறந்த தரத்திலும் வளர்ந்து வரும் உலகத் தரத்திற்கு ஈடாகவும் அரசு அமைக்க வேண்டும். முதல் கட்டமாக, கல்வி உரிமைச் சட்டம் 2009-இல் வகுத்திருக்கும் விதிகள் அனைத்து வகைப்பட்ட பள்ளிகளிலும் நிறுவி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். விதிகளைப் பின்பற்றாத பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும்.

மதிய உணவுத் திட்டம் 12 ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்பட வேண்டும்.

காலைச் சிற்றுண்டித் திட்டத்தை நடைமுறையாக்க வேண்டும்.

தாய்மொழி அல்லது மாநிலமொழி ஒன்றே கல்விப் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக அனுமதித்தல் கூடாது.

ஆங்கில வழிக் கல்வி நம் வகுப்பறைகளைப் புரியாமை இருளில் மூழ்கடித்து கல்வியை வெறும் குருட்டுமனனமாக்கி விட்டது. ஆங்கில மொழியின் பன்னாட்டு முக்கியத்துவத்தை மனதில் கொண்டு ஆங்கிலம் இரண்டாவது , மூன்றாவது மொழியாகச் சிறப்பாகக் கற்பித்தல் வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 பெரும் அபாயமாக இருக்கிறது. இந்தக் கல்விக் கொள்கை தனியார்மயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, அதனை தடைசெய்ய வேண்டும் என்பன போன்ற கல்வி குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளன.

இதையும் படிங்க : 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி - அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.