ETV Bharat / city

'எம்எல்ஏ இப்படித்தான் பேசவேண்டும் என அமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல' - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - தமிவ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம்

திமுக அரசு ஒட்டுமொத்தமாக கூட்டுறவு சங்கங்களை கலைத்து தங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களை கொண்டுவர வேண்டும் என செயல்பட்டு வருகிறது. உறுப்பினர் இப்படித்தான் பேசவேண்டும் என அமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல. சட்டப்பேரவையில் பேச்சுரிமையும் பறிக்கப்படுகிறது என சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தபின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

'உறுப்பினர் இப்படித்தான் பேசவேண்டும் என அமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல' - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Apr 9, 2022, 3:19 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வில் மூன்றாவது நாளான நேற்று(ஏப். 08) சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தபின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "97ஆவது அரசியல் சாசன சட்டத்தின்படி தன்னாட்சி பெற்ற கூட்டுறவு ஆணையம் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டது.

அதிமுக ஆட்சியில் அம்மா இருந்தபோது, சங்கத் தேர்தல் நடைபெற்று கூட்டுறவு சங்கம் சிறப்பாக இயங்கி வந்தது. அவர் மறைவிற்குப் பின்னும் நடைபெற்றது. அதிமுக கொண்டுவந்த கரணத்தினாலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் வேண்டுமென்று குறைக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் இப்படித்தான் பேசவேண்டுமா?: திமுக அரசு ஒட்டுமொத்தமாக கூட்டுறவு சங்கங்களை கலைத்து தங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களை கொண்டுவர வேண்டும் என செயல்பட்டு வருகிறது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 நிமிடம் பேசினால், அமைச்சர்கள் 50 நிமிடம் பதிலளித்து நாங்களே முழுவதும் பேசியதாக தெரிவிக்கின்றனர்.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 நிமிடம் பேசினால், அமைச்சர்கள் 50 நிமிடம் பதிலளித்து நாங்களே முழுவதும் பேசியதாக எடுத்துக் கொள்கின்றனர்.

பிரதான எதிர்க்கட்சிக்கு போதிய நேரம் ஒதுக்கித்தரப்படுவதில்லை. உறுப்பினர் இப்படித்தான் பேசவேண்டும் என அமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல. சட்டப்பேரவையில் பேச்சுரிமையும் பறிக்கப்படுகிறது. பொங்கல் பரிசான 21 பொருள்கள் முறையாகவோ தரமாகவோ வழங்கவில்லை.

கரூர் மாவட்டத்தில்...: தவறுகளை ஆதாரத்துடன் எடுத்துக் கூறியபோதும் உணவுத் துறை அமைச்சர் எங்கும் தவறு நடைபெறவில்லை என்ற தவறான கருத்தை அவையில் எடுத்து வைத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் சாலையே போடாமல் பணம் பெற்றிருப்பது குறித்து செய்தி வெளியான பின், தற்போது அவசர அவசரமாக சாலை போட்டு வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை, இந்த அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க: 'கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.