இது குறித்து அவர் தனது ட்விட்டரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசனுக்குத் தனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் அதில், வாசன் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக பல்லாண்டுகள் வாழ இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், வேண்டுவதாகவும் தனது அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஜூலை 21ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

ஜி.கே. வாசன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜி.கே. மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்.
தமாகா - காங்கிரஸ் - தமாகா
மூப்பனார் மறைவிற்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றி பின்னர் தமாகாவை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். அதன் பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று ஒருமுறை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து காங்கிரசிலிருந்து வெளியேறிய ஜிகே. வாசன் தனது தந்தை ஜி.கே. மூப்பனார் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை 2014 நவம்பர் 28இல் மீண்டும் தொடங்கினார்.
இதையும் படிங்க: பாரதியாரின் சிலையை முறையாக பராமரிக்கக் கோரி டெல்லி துணை முதலமைச்சருக்கு ஜி.கே. வாசன் கடிதம்