'லிவ்விங் டூ கெதரை ஏற்க முடியாது' - பாதுகாப்பு கோரிய காதலர்களுக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் பதில்
திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழும் உறவு, ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்புடையது அல்ல என பஞ்சாப் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய தனியுரிமை கொள்கையைத் திரும்பப் பெறுங்கள்: ஃபேஸ்புக்கிற்கு மத்திய அரசு கடிதம்!
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பகிரும் செயலியான வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமை கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இதற்கு பலதரப்பட்ட மக்களிடத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, மத்திய அரசும் புதிய தனியுரிமை கொள்கையைத் திரும்ப பெற அந்நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தமிழ்நாடு அரசின் கரோனா நிவாரண நிதியுதவித் தொகையான 4,000 ரூபாயை மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
’பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை ரத்து செய்து ஆணையமாக மாற்றும் முடிவு’ - சீமான் எதிர்ப்பு
சென்னை: பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை ரத்து செய்து ஆணையமாக மாற்ற முடிவெடுத்திருப்பது, பள்ளிக்கல்வித் துறையின் நலனை பாதிக்கும் மிகத்தவறான நிர்வாக முடிவு என சீமான் தெரிவித்துள்ளார்.
ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சரின் பயணத்திட்டம்
கரோனா தொற்று பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிய கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மநீம தோல்விக்கு முழு பொறுப்பு கமல் தான் - முருகானந்தம் பளீர்
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகவும், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு முழுக்காரணம் கமல்ஹாசன் தான் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் முருகானந்தம் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியைக் காணலாம்.
டவ்தே புயல்: தரைமட்டமான ஐந்து மாடி கட்டடம்
டவ்தே புயல் காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஜமல்பூர் பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. நல்வாய்ப்பாக நேற்றே புயல் எச்சரிக்கை காரணமாக கட்டத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
புதுச்சேரியில் நாளை முதல் 18 - 45 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசி
புதுச்சேரி: 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இணையதள முன்பதிவை, அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
’புயல் பாதித்த குஜராத்திற்கு 1,000 கோடி ரூபாய் நிதியுதவி’ - பிரதமர் மோடி
புயல் பாதிப்பிற்குள்ளான குஜராத்திற்கு மத்திய அரசு 1,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
சர்ச்சைகளுடன் வெளியான 'தி ஃபேமிலி மேன் 2' ட்ரெய்லர்!
மும்பை: மனோஜ் பாஜ்பாய், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'தி ஃபேமிலி மேன் 2' இணையத்தொடரின் ட்ரெய்லர் இன்று (மே 19) வெளியானது.