ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - நேரு உள் விளையாட்டரங்கம்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : May 17, 2021, 3:03 PM IST

கரோனா நிவாரண நிதி: ஒரு கோடி ரூபாய் வழங்கிய அதிமுக

சென்னை: அதிமுக சார்பில் கரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியும், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் கரோனா நிதி வழங்கினார்

கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்

பெருந்தொற்று காலத்தில் சிறைக் கைதிகளின் நிலை என்ன?

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலின் 2ஆவது அலை தீவிரமடைந்து வருகிறது. இச்சூழலில், தமிழ்நாடு சிறைகளில் இருக்கும் கைதிகளின் நிலை என்ன, அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் என்ன, அவர்களின் பாதுகாப்பிற்காக சிறை நிர்வாகம் மேற்கொண்டுவரும் முயற்சிகள், சிறைக் கைதிகளின் விடுப்பு குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் தற்போதைய நிலையை அலசுகிறது இத்தொகுப்பு.

பொது இடங்களில் ஆவி பிடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்ற ஆவி பிடித்தல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக் கொள்ள கூடாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேரு உள் விளையாட்டரங்கம் முன்பாக ரெம்டெசிவிர் கேட்டு தர்ணா!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மே 18ஆம் தேதி முதல் ரெமிடெசிவிர் மருந்து கிடைக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், நேரு உள் விளையாட்டரங்கில் ரெமிடெசிவிர் மருந்து விற்கப்படாது என காவல்துறை அறிவித்தது. இதனையடுத்து மருத்துக்காக காத்திருந்தவர்கள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

தலைநகரில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருகிறது - மாநகராட்சி தகவல்!

சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் 21.2 விகிதமாக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஸ்ரீநகரில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

3 லட்சத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

நேற்று(மே.16) ஒரே நாளில் இரண்டு லட்சத்து 81 ஆயிரத்து 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

டாக்டே புயல்: மும்பை மக்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் எச்சரிக்கை

டாக்டே புயல் மும்பையை தாக்கியுள்ள நிலையில் அமிதாப் பச்சன், கரீனா கபூர், கார்த்திக் ஆர்யன், மலைக்கா அரோரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பை மக்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

என்னையும் கைது செய்யுங்கள் - கொதித்தெழுந்த ஓவியா

டெல்லியில் மோடி அரசை விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை ஓவியா ட்வீட் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.