ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1pm

author img

By

Published : Jun 12, 2021, 1:06 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1pm
1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1pm

மேட்டூர் அணை திறப்பு: மலர்த் தூவி வரவேற்றார் ஸ்டாலின்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீர் திறந்து வைத்தார். அணை வரலாற்றில் இன்று 88ஆவது முறையாக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9ஆவது பாடமாக தமிழ் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் விருப்பப் பாடங்களாக 8 பாடங்கள் இருந்து வந்த நிலையில், இந்த கல்வியாண்டு முதல் ஒன்பதாவது பாடமாகத் தமிழ் சேர்க்கப்படுகிறது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

’கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை’ - சென்னை மாநகராட்சி திட்டம்

கரோனா பரிசோதனை முடிவு தாமதத்தை தடுக்கும்வகையில், ஆர்.டி பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்த 1,26,000 கோவாக்சின் தடுப்பூசிகள்

ஹைதராபாத்: தெலங்கானாவின் ஹைதராபாத்திலிருந்து மூன்றாவது நாளாக ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

இனி 8 போட வேண்டாம்!

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுநர் பயிற்சியை முடித்தவர்களுக்கு வாகன உரிமம் வழங்கும் புதிய நடைமுறையை ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கொண்டுவந்துள்ளது.

'வடலூர் சத்திய ஞான சபையின் சர்வதேச மையம் விரைவில்' - அமைச்சர் சேகர்பாபு

வடலூர் சத்திய ஞான சபையின் சர்வதேச மையம் அமைக்க விரைவில் பணி தொடங்க உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்: பிஞ்சுகளைக் கிள்ளி எறியாதீர்!

தொற்று நோயின் காரணமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக ஒன்பது மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறும் இடர் உள்ளதாக உலக சுகாதார அமைப்பும், யுனிசெஃப்பும் எச்சரித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: 'ஜூன் 26இல்' உழவர்கள் கையில் எடுத்த 'அஸ்திரம்!'

ஒன்றிய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர்களின் போராட்டம் 200 நாள்களை நெருங்கிவருகிறது. இதனைத் தீவிரப்படுத்தும்வகையில் நாடு முழுவதுமுள்ள ஆளுநர் மாளிகைகளில் உள்ளிருப்புப் போராட்டத்தை உழவர்கள் அறிவித்துள்ளனர்.

மியான்மர் வன்முறையைக் கண்டித்த ஐ.நா.மனித உரிமைகள் கழகம்

மியான்மரில் வன்முறை அதிகரித்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழக ஆணையர் மிச்செல்லே பேச்லெட் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வன்முறையால் மியான்மரின் கிழக்கு கயா மாநிலத்தில் கடந்த மூன்று வாரங்களில் 1 லட்சத்து 8 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

1300 இந்திய சிம் கார்டுகளை சீனாவிற்கு கடத்திய நபர் கைது

இதுவரை 1300 இந்திய சிம் கார்டுகளை சீனாவிற்கு கடத்திய அந்நாட்டைச் சார்ந்த நபரை, இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.