ETV Bharat / city

இனி விதிமீறும் வாகன ஓட்டிகள் தப்ப முடியாது..! - ஆர்டிஓக்களுக்கு இ-சலான் கருவி!

சென்னை: விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் இ-சலான் கருவி, போக்குவரத்து காவல் துறையினரை தொடர்ந்து செக்கிங் இன்ஸ்பெக்டர், ஆர்டிஓக்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

e-chalan
author img

By

Published : Jul 3, 2019, 4:20 PM IST

தமிழ்நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் இயக்குவோர் மீதும், விதிமுறைகளை கடைபிடிக்காதோர் மீதும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். வாகன ஓட்டிகள் செய்யும் குற்றத்திற்கு ஏற்றவாறு அலுவலர்கள் இ-சலான் கருவி மூலம் அபராத தொகை விதித்து வருகின்றனர். இந்த இ-சலான் கருவியை போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த கருவியை செக்கிங் இன்ஸ்பெக்டர், ஆர்டிஓக்களுக்கும் வழங்கவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இது தவிர போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ள இணையதளம் வாயிலாக ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்டவைகளுக்கு வீட்டில் இருந்தே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் ஆர்.டி.ஓ அலுவலங்களில் போக்குவரத்து அலுவலர்களை நேரில் சென்று உரிய பரிசோதனைகளுக்கு பிறகு தேவையான ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு லைசென்ஸ், ஆர்சி புக் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து போக்குவரத்துதுறை அலுவலர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆர்.டி.ஓ, இன்ஸ்பெக்டர்கள் என கிரேடு முறையில் 300க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். இவர்களும் போக்குவரத்து துறை காவல் துறையினரைப்போன்று பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். அதற்காக அவர்கள் எழுத்துப்பூர்வமான ரசீது அளிப்பதே நடைமுறையில் உள்ளது.

தற்போது இ-சலான் மூலம் அபராதம் விதிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய இ-சலான் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கருவியை பயன்படுத்தி போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அனைத்து இடங்களிலும் இ-சலான் கருவி விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Intro:nullBody:டிராபிக் போலீசாரை தொடர்ந்து செக்கிங் இன்ஸ்பெக்டர் , ஆர்டிஓ ஆகியோருக்கு இ -சலான் கருவி

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் இயக்குவோர் மீதும் , மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை கடைபிடிக்கதோர் மீதும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.வாகன ஓட்டிகள் செய்த குற்றத்தை பொறுத்து அதிகாரிகள் இ சலான் கருவி மூலம் அபராத தொகை விதித்து வருகின்றனர் .போக்குவரத்து காவல்துறையினரை தொடர்ந்து தற்போது செக்கிங் இன்ஸ்பெக்டர் , ஆர்டிஓ ஆகியோருக்கு இ -சலான் கருவி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது .

போக்குவரத்து துறை சார்பில் லைசென்ஸ் ,வாகனப்பதிவு உள்ளிட்டவற்றிற்கு போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ள இணையதளத்திற்கு சென்று வீட்டில் இருந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.அதன் பின்னர் ஆர்.டி.ஓ அலுவலங்களில் போக்குவரத்து அதிகாரிகளை நேரில் சென்று உரிய பரிசோதனைகளுக்கு பிறகு தேவையான ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம் .இதேபோல் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு லைசென்ஸ் ,ஆர் .சி புக் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஆர்.டி .ஓ , செக்கிங் இன்ஸ்பெக்டர்களுக்கு இ -சலான் கருவி வழங்க முடிவு செய்யப்பட்டு,அதனை தொடர்ந்து சோதனை முறையில் பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட கருவி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதை பற்றி போக்குவரத்துதுறை அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது :

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு ஆர்.டி.ஓ , இன்ஸ்பெக்டர்கள் என கிரேடு முறையில் 300க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். இவர்கள் போக்குவரத்து துறை போலீசார் போல பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அப்போது விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது .அதற்காக அதிகாரிகள் ரசீது எழுதித் தருவார்கள், தற்போது வரை இந்த நடைமுறை தான் உள்ளது.இந்நிலையில் இ -சலான் மூலம் அபராதம் விதிக்கும் முறை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது .
இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய இ -சலான் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கருவியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்ணை பதிவிட்டால், வட்டார போக்குவரத்து அலுவலக சர்வருடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இ -சலான் கருவியில் குறிப்பிட்ட வாகன ஓட்டியின் பெயர் ,வண்டியின் எஞ்சின் எண் ,வீட்டு முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிந்துவிடும் .மேலும் சம்பந்தப்பட்ட கருவியில் அதிக பாரம் ஏற்றிதல் , உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தை இயக்குதல் என ஏராளமான விதி மீறல்கள் குறித்த தகவல்கள் இருக்கும் .இதனால் வாகன ஓட்டி செய்த குற்றத்தைப் பொறுத்து அதற்கான பட்டனை அழுத்தினால் உடனே அபராத தொகைக்கான சலான் பிரிண்ட் கிடைக்கும் .

அந்தப் பிரிண்டை அதிகாரிகள் விதி மீறலில் ஈடுபட்ட வாகனம் ஓட்டிகளிடம் கொடுப்பார்கள். மேலும் இ -சலான் கருவியில் கிரெடிட் கார்டு , டெபிட் கார்டு முறையில் பணம் செலுத்தும் வசதியும் இடம்பெற்றுள்ளது .தற்போது சோதனை முயற்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அணைத்து இடங்களுலும் இந்த இ -சலான் கருவி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார் .Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.