ETV Bharat / city

விஜய பாஸ்கரின் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய முடிவு - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் - விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய முடிவு

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வங்கி லாக்கரை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய முடிவு

author img

By

Published : Oct 21, 2021, 9:54 AM IST

சென்னை: முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் (அதிமுக), வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 18ஆம் தேதி விஜயபாஸ்கர், அவருக்குச் சொந்தமான 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

இந்த சோதனையில் 4.87 கிலோ தங்கம், 138 கனகர வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், சொத்து பரிவர்த்தனை ஆவணங்கள், 24 லட்சம் ரூபாய் பணம், 19 ஹார்டிஸ்கள், சில முக்கிய ஆவணங்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

விஜயபாஸ்கர் உதவியாளர்கள் வீட்டில் சோதனை
விஜயபாஸ்கர் உதவியாளர்கள் வீட்டில் சோதனை

மேலும், விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், சந்திரசேகர் ஆகியோரின் இடங்களை பூட்டி லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் சீல் வைத்துச் சென்றனர்.

வீடுகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள்
வீடுகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள்

விஜயபாஸ்கர் உதவியாளர்கள் வீடுகளுக்கு சீல்

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை எஸ்.பி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்ட 138 பேருந்துகளின் பதிவு சான்றிதழ்களை விசாரித்து வருகின்றனர்.

விஜயபாஸ்கர் உதவியாளர்கள் வீட்டில் சோதனை
விஜயபாஸ்கர் உதவியாளர்கள் வீட்டில் சோதனை

மேலும் சீல் வைக்கப்பட்டுள்ள சரவணன், சந்திரசேகரின் வீட்டை திறந்து சோதனை மேற்கொள்ள நீதிமன்றம் மூலமாக ஆணைப் பெற முடிவு செய்துள்ளனர்.

விசாரணை நடத்த முடிவு

விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோரின் வங்கி கணக்கு, வங்கி லாக்கர்களை திறந்து சோதனை நடத்த அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

விஜயபாஸ்கர், ரம்யா
விஜயபாஸ்கர், ரம்யா

போதுமான ஆதாரங்களை திரட்டிய பின்பு விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யாவை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.